ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 22, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • மாநிலங்களவையில் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
  • மத்திய பிரதேச பாஜக ஆட்சியில், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டதில் சில விவசாயிகள் 1 ரூபாய் நிவாரணமாக பெற்றுள்ளனர்.
  • செப்டம்பர் 24 முதல் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதுமாக தொடர் ஆர்ப்பாட்டத்தை நடத்திட காங் கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • மாநிலங்களவையில் தங்களுக்கு உரிய எண்ணிக்கை இல்லாத சூழலில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தொடர் வற்புறுத்தலையும் மீறி மோடி அரசுக்கு சாதகமாக குரல் வாக்கெடுப்பை துணைத் தலைவர் நடத்தியது விதிகளுக்கு முரணானது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
  • மோடி அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதா குறித்து திருணாமுல் மற்றும் இடது சாரி கட்சிகள் எழுப்பிய இரண்டு கேள்விகள்: மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயம் குறித்து மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வர வேண்டும்? சாலையில் போராடும் விவசாயச் சங்கங்களுடன் ஏன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை? இந்த முக்கியமான கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் இல்லை என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
  • வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள், வருகிற 28ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்துள்ளன.

தி டெலிகிராப்:

  • வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவை யின் எட்டு உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கருப்பு ஞாயிறு என்றும், நிர்வாண அரசரின் பாசிச நடவடிக்கை என்றும் சாடியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • பிரதமரின் பி.எம்.கேர்ஸ் டிரஸ்டுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் நன்கொடை அளித்தன. தற்போது நவோதயா பள்ளிகள், அய்.அய்.டி., அய்.அய்.எம்., மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து ரூ.21.80 கோடி நன்கொடையைப் பெற்றுள்ளதை தகவல் அறியும் சட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலங்களவையில் துணைத்தலைவர் விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டார். அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க் கட்சிகள் சார்பில் தரப்பட்டது. அதனை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு நிரகாரித்தது, அரசமைப்புச் சட்டப்பிரிவு 90இன் படி தவறு என காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி தெரிவித்து உள்ளார்.
  • ஆர்.எஸ்.எஸ்.சின் விவசாய அமைப்பான பாரதீய கிஷான் சங், விவசாயம் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களால் வேளாண் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளது.

- குடந்தை கருணா

22.9.2020