ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 12, 2020 • Viduthalai • மற்றவை

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • கொத்தடிமைக்கு எதிராகவும், மனித உரிமைக்காகவும் பாடுபட்ட ஆரிய சமாஜ் அமைப்பின் தலைவர் சுவாமி அக்னி வேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். காஷ்மீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்ததற்காக, சங் பரிவாரங்களால் தாக்கப் பட்டவர்.
  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப் பாளராக இருந்த முகுல் வாஷ்னிக் மாற்றப்பட்டு, தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ்:

  • மோடி அரசு, முக்கியமான மசோதாக்களை நாடாளு மன்றத்தில் விவாதிக்காமல், அவசரச் சட்டம் மூலம் நடைமுறைப் படுத்தி, ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இந்த ஆண்டு மார்ச் 24-க்குப் பிறகு அதாவது கரோனா தொற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை 11 அவசரச் சட்டங் களை மோடி அரசு பிறப்பித்துள்ளது. நடைபெற உள்ள நாடாளு மன்றக் கூட்டத்தொடரில், கேள்வி நேரம் கிடையாது. ஜீரோ ஹவர் எனும் நேரடிக் கேள்வி நேரம் பாதியாகக் குறைப்பு என அனைத்தும் நாடாளுமன்றத்தை கேலிக்குரியதாக்கும் செயல் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் டெரிக் ஓ பிரைன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தி இந்து:

  • நாடு 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2022இல், மாணவர்கள் புதிய கல்விக் கொள்கையின்படியான பாடத்திட்டத்தில் படிப்பார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  • தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கை, மத்திய அரசு வகுத்துள்ள அலுவல்மொழி சட்டம் 1963இன் ஒப்புதல் பெற்றது என்பதை பலரும் நினைவு கொள்ள வேண்டும் என கட்டுரையாசிரியர் டி.ராமகிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

  • கல்வி என்பது ஒத்திசைவுப்பட்டியலில் உள்ளது. மாநிலங் களோடும், நாடாளுமன்றத்திலும் விவாதிக்காமல், புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களுக்கு மா நிலங்களே செலவு செய்ய வேண்டும் என்று சொல்வதும், ஆனால் மத்திய அரசு எல்லா முடிவுகளையும் எடுக்கும் என்பதும் எப்படி மோடி சொல்லும் நெகிழ்வுத்தன்மைக்குப் பொருந்தும்? என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

- குடந்தை கருணா

11.9.2020