ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 28, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

  • ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச மறுசீரமைப்பு (மத்திய அரசு சட்டங்களை தழுவி) மூன்றாவது ஆணை, 2020அய் மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழை வெளியிட்டுள்ளது. அதில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தின் 17ஆவது பிரிவில் உள்ள `மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள்' என்ற வார்த்தையை மட்டும் நீக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இந்திய குடிமகன்கள் யாரும் காஷ்மீரில் இனிமேல் சொத்துக்கள் வாங்கலாம். இது உடனடி யாக அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தத்தில் விவசாய நிலங்களை, விவசாயிகள் அல்லாதவ ருக்கு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், விவசாய நிலத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் கட்டுவதாக இருந்தால் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • பீகாரில் ஆட்சிக்கு வந்தால், மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மா நிலத்தில் ரத்து செய்யப்படும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என ஆர்.ஜே.டி. கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
  • பீகார் மாநிலத் தேர்தல் அனைவரும் இதுவரை கொண்டிருந்த, நிதிஷ்குமார் - மோடி கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும் என்ற நிலையை மாற்றியுள்ளது. நாட்டின் முக்கியமான தேர்தலாக இருக்கும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

  • ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை அலகாபாத் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஅய் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற மக் களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கு வதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் மேலும் காலம் தாழ்த் தாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர்.
  • புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க உரிய அரசு ஆணை பிறப்பிக்க அமைச்சரவைக் கூட்டத்தில், முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் வே. நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • மோடி அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக வரும் நவம்பர் 5ஆம் தேதி நாடு தழுவியளவில் சாலை மறியல் நடைபெறும் என விவசாய அமைப்புகள் தெரிவித்து உள்ளன.
  • பீகாரில் வேலைவாய்ப்பின்மை, புலம் பெயர் தொழிலாளர் களின் அவதி உள்ளிட்ட பத்து கேள்விகளுக்கு பீகார் தேர்தல் பரப்புரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி பதில் தர வேண்டும் என ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • மத்தியிலும், பீகாரிலும் ஆட்சி புரிவது தேசிய அழிப்பு கூட்டணி என சிபிஅய்(எம்.) கட்சியின் தலைவர் பிருந்தா காரட் சாடியுள்ளார்.

தி டெலிகிராப்:

  • மோடி அரசுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளின் கருத்தை முடுக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டப்பட்ட முக நூல் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி ஆன்கி தாஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார்.

- குடந்தை கருணா

28.10.2020