ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 21, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

  • மறைந்த மும்பை நடிகர் சுசாந்த் சிங் மரணம் குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சர்ச்சைக்குரிய முன்னுதாரணமாக ஆகும் என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூசண், தான் மன்னிப்பு கேட்க முடியாது; எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்பேன் என தெரிவித்துள்ளார்.
  • செப்டம்பர் மாதம் நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ தேர்வுகள் நடத்துவது குறித்த விரிவான அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370ஆம் பிரிவு தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டதை தேசிய மாநாட்டுக் கட்சி அமைதியாக ஏற்றுக் கொள்ளாது; எதிர்த்து போராடும் என அதன் தலைவர் பரூக் அப்துல்லா தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
  • லாலு பிரசாத் கட்சியான ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.
  • மோடி அரசு உருவாக்கிய பி.எம்.கேர்ஸ் நிதி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? எந்த தணிக்கைக்கும் அந்த நிதியம் ஆட்படாது என்று அரசு ஏன் தெரிவிக்கிறது? என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:

  • சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் :

  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள எல்லா துறைகளுக்கும் ஒரே தேசியத் தேர்வு என்பதை தமிழ்நாடு இளைஞர்கள் தங் களது வாய்ப்பைப் பாதிக்கும் ஒன்றாகக் கருதுகிறார்கள்.

- குடந்தை கருணா

21.8.2020