ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 14, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

  • ஹெச்1-பி விசா வழங்குவதற்கு பல்வேறு தடைகளை கடந்த மாதம் 22ஆம் தேதி டிரம்ப் பிறப்பித்தார். தற்போது அதில் சில தளர்வுகளை திடீரென அறிவித்துள்ளார். இதன்படி, அதே நிறுவனத்தில் பணியில் தொடர ஹெச்1-பி விசா வழங் கலாம் என்றும் தனது மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:

  • தேசியக் கொடியை அவமதித்து வீடியோ வெளியிட்டுள்ளதாக பாஜக நிர்வாகியும், காமெடி நடிகருமான எஸ்.வி. சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
  • அயோத்தி ராமன் கோயில் பூமி பூஜையை பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் முன்னின்று நடத்திய ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் மகந்த் நிருத்தியா கோபால் தாஸூக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:

  • உ.பி.யில் மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் 12-14 சத வீதம் உள்ளனர். சட்டமன்றத்தில் 63 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்துஸ்தான் டைம்ஸ்:

  • இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும் ஆங்கிலம், இந்தி தெரியாது என்பதால், அரசமைப்புச் சட்டத்தில் கூறப் பட்டுள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்கிட மத்திய அரசு சட்டம் கொண்டு வர உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

தி இந்து, டில்லிப் பதிப்பு:

  • பெரும்பான்மை என்பது தேசியவாதம் ஆகாது. இந்து நாடு என்ற விளிம்பில் இந்தியா இருக்கிறது என வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கூறியுள்ளார்.

- குடந்தை கருணா

14.8.2020