ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 8, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • பொருளாதார சரிவு 23.9 சதவீதம் வீழ்ந்துள்ளது மிகவும் அபாயகரமானது. அதிகார வர்க்கம் மெத்தனமாக இல்லாமல் பயனுள்ள நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும். இவை ஒரு சிந்தனைமிக்க, செயல்பாடுடைய அரசால்தான் முடியும். ஆனால், துவக்கத்தில் செயல்பட்ட அரசு, தற்போது கூட்டுக்குள் பதுங்கிவிட்டது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • தமிழ் நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் உயர்கல்விப் படிப்பில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு படிப்புச் சுமையை அதிகரிப்பதோடு, கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை மறுக்கும் என தமிழ் நாடு கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

  • தேசிய கல்விக் கொள்கை குறித்து குடியரசுத் தலைவர் மாநில ஆளுநர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி, இது அரசின் கல்விக் கொள்கை அல்ல; நாட்டிற்கான கல்விக் கொள்கை. இதை அனைவரும் புரிந்து கொண்டு முழுமையாக ஏற்க வேண்டும் என கூறினார்.

தி இந்து:

  • தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்த மாநில ஆளுநர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கல்விக்கான செலவீடு தற்போது 0.7 சதவீதம் தான் உள்ளது. இதனை அதிகப்படுத்த வேண்டும். சமூக நீதிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் கல்வி சிறந்த வழி என்று பேசினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்த முறையான செயல் திட்டம் தேவை. ஏற்கெனவே பட்டம் பெற்று வேலையின்றி பல்லாயிரக்கணக்கில் இளைஞர் உள்ள நிலையில், தொழிற்கல்வி என்ற ஒன்றுக்கு முக்கியத்துவம் என்பது சரியல்ல என ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட டில்லி மாநில கல்வி அமைச்சர் சிசோடியா கருத்து தெரிவித்தார்.
  • தேசிய கல்விக் கொள்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இது மாநிலங்களின் பங்களிப்பை குறைக்கக் கூடியது. இதைப் பற்றி இன்னும் நிறைய ஆலோசிக்க வேண்டி இருப்பதால் தற்போதைய நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த மாட் டோம் என குடியரசுத் தலைவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜி பேசினார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் ஆணையப் பங்குகளில் 52.98 சதவீத பங்கினை விற்க மோடி அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் போக்கை கைவிடுக; அரசுப் பணியிடங்களைக் காப்பாற்றிடுக என காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் எதிர்ப்பினை பதிவிட்டுள்ளார்.

டெக்கான் ஹெரால்டு:

  • உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா பெற்றோர் கள் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பால் விடுதலையானதை எதிர்த்து, சங்கரின் மனைவி கவுசல்யா தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

- குடந்தை கருணா

8.9.2020