ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 4, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • ஜே.இ.இ. தேர்வு நடைபெற்ற தேர்வு மய்யங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக இல்லாத சூழலில், வருகிற செப்.14-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் குடியரசுத் தலைவருக்கு டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதிலும், 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
  • ஆந்திர மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் அய்ந்தாம் வகுப்புவரை தெலுங்கு வழி கல்விக்கு பதிலாக ஆங்கில வழிக் கல்வி என்ற அரசின் ஆணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, கல்வி உரிமைச் சட்டத் தின் அடிப்படையில் தாய்மொழிக் கல்வி வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் :

  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றும் 55 வயதை கடந்த அதிகாரிகளுக்கு மதிப்பீடு முறையில்தான் பணி நீட்டிப்பு என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி நூற்றுக்கு 65 மதிப்பீடு பெறும் அதிகாரிகள்தான் 55 வயதைத் தாண்டி பணியில் நீடிக்க முடியும். அதேபோன்று, ஊழியர்களும் விருப்ப ஓய்வு கொண்டு வரவும் முடிவு எடுத்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:        

  • திமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு எஸ்.துரைமுருகன் மற்றும் பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தி இந்து:

  • நாட்டு மக்களின் உணர்வை அரசு தெரிந்து கொள்ள உதவிடும், கேள்வி நேரத்தை கைவிடுவது நாடாளுமன்ற ஜன நாயகத்திற்கு எதிரானது என முன்னாள் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான அமீத் அன்சாரி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

  • காஷ்மீரில் லடாக் மலை வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பும், நில உரிமை யும் இருக்க வேண்டும் என, என்ற தீர்மானத்தை பாஜக உறுப் பினர் கொண்டு வந்து ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 371 மற்றும் ஆறாவது பட்டியலைச் சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளும் மோடி அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருத்தப்படுகிறது.

- குடந்தை கருணா

4.9.2020