ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 9, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மகாதேவ் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் காஷ்மீரில் மீண்டும் மதவாதத்தை கிளப்ப முனைகிறார்கள் என்ற குற்றச் சாட்டுக்கு மதவாத அரசியலை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தான் காஷ்மீரில் நடத்தி வருகிறது. இந்த விளையாட்டில் அவர்கள் விரைவில் மூழ்கிவிடுவார்கள் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 15ஆம் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்திட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்து, இது தொடர்பாக, திமுக உள்ளிட்ட கட்சிகளோடு கலந்தாலோசித்து வருகிறது.
  • மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை, கூட்டாட்சி முறை, சமூக நீதி எதிராக உள்ளது. இதனை தமிழ் நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்ட நூறு கல்வியாளர்கள் தமிழ் நாடு முதல்வருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்கள்.
  • ’அரியர்ஸ்’ தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற தமிழ் நாடு அரசின் முடிவை, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் ஏற்கவில்லை என்பதாக தனக்குக் கடிதம் வந்துள்ளது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்ததும், அத்தகைய கடிதம் எதுவும் வரவில்லை என தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் தெரிவிப்பதும், மாணவர்களிடையே பெரும் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி டெலிகிராப்:

  • 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் இரு தரப்பில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
  • நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல், பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்ப்பின்மை, கரோனா தடுப்பு தோல்வி ஆகியவை குறித்து பிரச்சினைகளை எழுப்ப உள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

- குடந்தை கருணா

9.9.2020