ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 20, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு, தமிழ் நாட்டில் பா.ஜ.க.வைத் தவிர அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2013ஆம் ஆண்டில் இதே ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று திறந்தது, தற்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை நடை முறைப்படுத்த மோடி அரசு முனைவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
  • திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், கவுகாத்தி விமான நிலையங் களை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, லக்னோ, அகமதாபாத், மங்களூர் விமான நிலையங்களையும், இதே அதானி நிறுவனம் ஒப்பந்தத்தில் பெற்றுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:

  • மத்திய அரசுப் பணிகள் அனைத்திற்கும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் தேசியப் பணியாளர் தேர்வு முகமைக்கு (என்.ஆர்.ஏ.) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் குரூப் பி, சி பதவிகள், வங்கிகள், ரயில்வே என அனைத்திற்கும் ஒரே தேர்வு தான்.
  • மத்திய அரசு நடத்தும் 40 பல்கலைக்கழகங்களில் ஓபிசி பிரிவினருக்கான 1906 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என பல்கலைக்கழக மானியக் குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டதற்கு பதில் அளித்து உள்ளது.
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரை குழுவில் நியமிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அவ்வாறு செய்யாமல், வேறு ஒரு துறை அதிகாரியான பி.உமாநாத் அய்.ஏ.எஸ். அவர்களை நியமித்துள்ளது உள் நோக்கம் கொண்டது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:

  • திருவனந்தபுரம் விமான நிலையத்திற்காக 23.57 ஏக்கர் இடத்தை கேரள அரசு இலவசமாகத் தந்துள்ளது. ஆகவே, விமான நிலையத்தைத் தனியாருக்குக் குத்தகை விடுவதை ஏற்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
  • மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ., கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் 35,000 மாணவர் களில் 28 சதவீத மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், லேப்டாப் வசதி இல்லாததால், இணைய வழிக்கல்வியைத் தருவதில் சிரமம் உள்ளது என மத்திய கல்வித் துறையில் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (என்.சி.இ.ஆர்.டி.) ஆய் வில் தெரிய வந்துள்ளது.

தி டெலிகிராப்:

  • இந்தியாவில் பா.ஜ.க.வோடு மட்டும் அல்ல, உலகின் பல நாடுகளிலும், ஃபேஸ்புக் நிறுவனம் வலதுசாரிகள் பக்கம் சாய்ந்துள்ளது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது.

- குடந்தை கருணா

20.8.2020