ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 27, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, மன்னிப்பு கேட்பதன் மூலம் மகாத்மா காந்தியின் வரிசையில் பிரசாந்த் பூஷண் செல்லலாம் என்று கூறியதன் மூலம், அந்தமான் சிறையில் இருந்து மன்னிப்பு கேட்டு வீர் சவர்க்கார் விடுதலை பெற்றதை நினைத்து மாற்றி சொல்லிவிட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. தண்டனை குறித்து இறுதித் தீர்ப்பை வழங்கும்போது நீதிபதி அருண் மிஸ்ரா இந்த வரலாற்று உண்மையைப் பதிவு செய்திட வேண்டும் என்று தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • நீட், ஜே.இ.இ. மற்றும் ஜி.எஸ்.டி. குறித்த பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று பங்கேற்ற பா.ஜ.க. அல்லாத முதல்வர்கள் கூட்டத்தில், நீட், ஜே.இ.இ. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது தொடர் பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
  • கர்நாடக முதல்வரின் மகன், அரசு நிர்வாகத்தில் தலை யிட்டு தன்னை சூப்பர் முதல்வராக நினைத்துச் செயல்படுவதாக பா.ஜ.க. தலைமைக்கு அக்கட்சியின் ஏழு சட்ட மன்ற உறுப்பினர் கள் எழுதிய கடிதத்தை கர்நாடகக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் :

  • நீட் தேர்வை ரத்து செய்திடவும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வும் அனுமதி கோரி, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்த் தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • நீட், ஜே.இ.இ. தேர்வுகள் தேவையற்றது என அய்.அய்.டி. பேராசிரியர்கள் மிலிந்த் சோகோனி, ஓசின் தரப் ஆகியோர் தங்கள் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • நீட் தேர்வைத் தள்ளி வைத்திட வேண்டும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட் நாயக் மத்திய அரசின் கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • நீட், ஜே.இ.இ. தேர்வை தற்போது நடத்திடுவது குறித்து மறு பரிசீலனை செய்யுங்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கவுரவ் வல்லப் தெரிவித்துள்ளார்.

தி இந்து:

  • குழந்தைகளுக்கு மூன்று வயதிலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருப்பது, குழந்தைகளுக்கு மேலும் அழுத்தத்தைத் தான் கொடுக்கும் என என்.சி.ஆர்.டி. முன்னாள் இயக்குனர் கிருஷ்ணகுமார் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

27.8.2020