ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 18, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

  • மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான், யுவ மோர்ச்சா என்ற பா.ஜ.க. இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் 90,000 பேருக்குத் திரிசூலத்தைப் பாதுகாப்புக்காக தந்துள்ளார். அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. தம்தம் சவுகிதா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:

  • திருச்சி பொன்மலை ரயில்வே பணி நியமனத்தில் அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • ’நீட்’ மற்றும் ஜே.இ.இ. (JEE) தேர்வை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:

  • அசாம் மாநிலத்தில் குடியுரிமைச் திருத்த மசோதா, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அசாம் தேசிய மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டத்தைத் துவங்கியுள்ளது.
  • நீதித்துறைக்கு அவமதிப்பு வழக்கு உட்பட தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நிறையவே இருக்கிறது. ஆனால் அதை எப்போதாவது, மென்மையாகப் பயன்படுத்த வேண்டும் என பேராசிரியர் உபேந்திரா பாக்ஸி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தை மத்திய கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்ததற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தி இந்து, டில்லி:

  • தமிழ்நாட்டில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்த நினைக்கும் பா.ஜ.க. எண்ணம் வெற்றி பெறாது. திமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் போட்டியில் முன்னணியில் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
  • வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் தெரிவித்த விமர்சனங்கள் உண்மையானவை; இதற்கு தண்டனை என்பது நீதித்துறையை மிகவும் மலிவாகக் காட்டுகிறது என முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்கள்.

டெக்கான் ஹெரால்டு:

  • 2018இல் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்ட முன்னாள் சிபிஅய் அதிகாரி, ராகேஷ் அஸ்தானா, எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

  • உ.பி.யில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராமசபைத் தலைவர் சத்யமேவ் கொலை செய்யப்பட்டதையடுத்து, அங்கே காட்டாட்சி நடைபெறுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

- குடந்தை கருணா

18.8.2020