ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 29, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

 • கரோனா ஊரடங்கால், மக்கள் வங்கிகளில் நகைக்கடன் பெறுவது 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

 • தனியார் மருத்துவ கல்லூரிகளில் முது நிலைப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார் மனு அடிப்படையில் வழக்கை சிபிசிஅய்டி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • கரோனா முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பாலியில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு, தானியங்கள் வழங்கிட உச்சநீதிமன்றம் முன்னரே பிறப்பித்த உத்தரவு எவ்வாறு பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான பிரமாண பத்திரத்தை நான்கு வாரத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 • டில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகி தனது பணியை சரிவர செய்ய தவறியதாலும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாலும், அப்பதவியில் இருந்து குடியரசுத் தலைவரால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 • பீகார் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி, விரைவில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என பேசியுள்ளார்.
 • கரோனா தொற்று கண்டறிய மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘ஆரோக்யா சேது’ செயலியில் தேசிய தகவல் மய்யத்தின் பெயர் இடம்பெறுகிறது. அவ்வாறு இருக்கும்போது, அதனை வடிவமைத்தது யார் என்ற விவரம் தங்களுக்குத் தெரியாது என தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்டதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் தேசிய தகவல் மய்யம் பதிலளித்துள்ளது. இதைப் பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் (சிஅய்சி) வனஜா சர்னா, உரிய விளக்கமளிக்குமாறு தேசிய தகவல் மய்யத்துக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.
 • சென்ற ஜூலை மாதத்தில் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி வீட்டு வாசலில் குப்பை கொட்டுதல் மற்றும் சிறு நீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்ட ஏ.பி.வி.பி. தேசியத் தலைவர் சண்முகம் சுப்பையா, கட்டி முடிக்கப்படாத எய்ம்ஸ், மதுரை மருத்துவமனையின் போர்டு உறுப்பினராக மோடி அரசால் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளன.
 • பீமா கொர்கான் பிரச்சினையில் ஸ்டான் சுவாமி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்படுவது இந்தியாவில் அரசியல் மற்றும் காவல்துறையில் நிலவும் மாற்றத்தை உணர்த்துகிறது என பேராசிரியர் கிறிஸ்டப் ஜாப்ரலெட் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
 • மோடி ஆட்சியில், விசுவ பாரதி, புதுச்சேரி, உத்தரகாண்ட், மணிப்பூர், அலகாபாத், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மீது குற்றச்சாட்டு வந்த நிலையில் நடவடிக்கை எடுத்திடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 • அய்.அய்.டி. உள்ளிட்ட பொறியியல் கல்லூரிக்கான ஜேஇஇ (யிணிணி) தேர்வில் 99.8 சதவீதம் எடுத்த கவுகாத்தியைச் சேர்ந்த மாணவன், ஆள் மாறாட்டம் செய்து தேர்வினை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த காவல்துறை அய்ந்து பேரை கைது செய்துள்ளது.
 • உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்னடைந்தோர்க்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் கேரள அரசின் முடிவிற்கு, நாராயணகுருவின் எஸ்.என்.டி.பி. மற்றும் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

 • 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினர் குறித்தும் கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என ஆர்.தவமணி தேவி தொடுத்த வழக்கின் மீது உரிய பதிலை அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தாக்கீது அனுப்பியுள்ளது.

- குடந்தை கருணா

29.10.2020