ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 15, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

  • ராஜஸ்தான் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பில், முதல்வர் அசோக் கேலாட் அரசு வெற்றி பெற்றது.
  • நீதிபதிகள் செயல்பாட்டைச் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்த விவகாரத்தில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவருக்கான தண்டனை குறித்து வரும் ஆகஸ்டு 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது ஜன நாயகத்தை வலுவிழக்கச் செய்யும் என சிபிஎம் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
  • பெரும்பான்மை பெற்றுவிட்டதாலேயே பிரதமர் மோடி நாட்டிற்கு எதைச் செய்தால் நல்லது என்பதை இன்னமும் உணரவில்லை. அயோத்தியில் ராமன் கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்டதும் இதில் அடங்கும் என மூத்த பத்திரிக்கை யாளர் பர்சா வெங்கடேஷ்வர் ராவ் தனது கட்டுரையில் எழுதி யுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:

  • இந்து இந்தியா என்பதை காந்தி, நேரு, மவுலானா ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். பலரின் தியாகத்தாலும், உயிர் நீப்பாலும், சுதந்திரம் அடைந்துள்ளோம். தற்போது நடக்கும் மக்களை பிளவுபடுத்தி விலக்கிடும் அரசிய லுக்கு இங்கு இடமில்லை என தனது கட்டுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

டெக்கான் ஹெரால்டு:

  • ஓபிசி பிரிவினர்க்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், 15 நாட்களுக்குள் பதில் அளிக்க மத்திய சுகாதாரத் துறைக்கும், மருத்துவக் கவுன்சிலுக்கும், உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தி டெலிகிராப்:

  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் வெளியிட்ட கருத்துக்கள் அடிப் படையில் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அவரது அந்த டுவிட்டர் செய்தியை பலரும் தற்போது வெளி யிட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப், ராமசந்திர குகா, மத்திய அமைச்சராக இருந்த சைபூதீன் சோஷ் மகன் சல்மான் அனீஷ் சோஷ்,  நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசீ, புனே நகரைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் சுகார் பல்சிகார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • இரண்டு ஆண்டு விழாக்கள் என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர் ராம்சந்திர குகா தற்போது இந்தியா சந்தித்து வரும் பிரச்சினகள் குறித்து எழுதியுள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ்:

  • இந்திய நாடு எந்த மதத்தையும் சேர்ந்ததாக இருக்கக் கூடாது என்பதில் காந்தியார் உறுதியாக இருந்தார் என முன் னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

- குடந்தை கருணா

15.8.2020