ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 9, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

 • ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர், எட்டு முறை நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம் விலாஸ் பஸ்வான் மறைந்தார்.
 • பீகார் தேர்தலில், பஸ்வான் கட்சி தனித்து போட்டியிடுவது பா.ஜ.க.வின் அரசியல் நாடகமாகப் பார்க்கப்படுகிறது என தலையங்கச் செய்தி கூறுகிறது.
 • தங்களது தொலைக்காட்சி ஊடகத்திற்கு விளம்பரம் பெறுவ தற்காக மோசடியாக மக்கள் அதிகம் பார்க்கும் ஊடகம் அதாவது டி.ஆர்.பி. என்பதை உருவாக்குவதாக ‘அர்னாப் கோஸ்வாமி’ தலை மையில் இயங்கும் ரிபப்ளிக் டிவி போன்று மூன்று தொலைக்காட்சி ஊடகங்கள் குறித்து மும்பை காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

 • டில்லியில் தப்ளிக் ஜமாத் நடத்திய மாநாடுதான் கரோனா பரவ காரணமாக இருந்தது என சில வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு தவறான தகவல்களை தந்தது என்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசின் பதில் மனு மழுப்பலாக உள்ளது என தலைமை நீதிபதி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
 • ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டில்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பத்து மாநில முதலமைச்சர்களைப் பாராட்டி, உங்களது முயற்சிகள், கூட்டாட்சியை வலுப்படுத்தும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 • பீகார் மாநிலத்தில் பி.எஸ்.பி., உபேந்திரா குஸ்வாக தலைமையிலான ஆர்.எல்.எஸ்.பி., உவைசியின் ஏ.அய்.எம்.அய்.எம். கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணியை உருவாக்கியுள்ளன.
 • குடியுரிமை திருத்த மசோதா போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பிரச்சினையின் தன்மையை புரிந்து கொள்ளா மல் அளித்த தீர்ப்பு என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • சாஹின் பாக் போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களின் குரல். அதில் இந்த இடத்தில்தான் கூற வேண்டும் என்று சொல்வது பெரும் பான்மைவாதத்தின் குரல் என எழுத்தாளரும் இசையமைப்பாளருமான டி.எம்.கிருஷ்ணா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 • ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து உ.பி. அரசின் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து விட்டு யாரை பாதுகாக்க எடுக்கப்படுகிறது?  என உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.டி.துல்சி, எம்.பி. அவரது உதவியாளர் தனீசா புரி தங்களது கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. மேலும் 9.6 சதவீதம் இறங்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தி இந்து:

 • உ.பி.ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை, ஜாதீய அக்கிரமங்களின் ஒரு நிகழ்வு. அதனை புறந்தள்ளி, இதற்கு எதிராக போராடுபவர்களை ஜாதீயத்தைத் தூண்டுகிறார்கள் என்ற வாதம் வைக்கப்படுகிறது என எழுத்தாளர்கள் மேரி ஜான், சதீஸ் தேஷ்பாண்டே தங்களது கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்துஸ்தான் டைம்ஸ்:

 • ஹாத்ராஸ் சம்பவம், பாஜகவை வெகுவாக பாதிக்கும். உ.பி.யில் தாழ்த்தப்பட்டோர் வாக்கு வங்கி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

 • கொல்கத்தாவில் பாஜகவின் பேரணியில் கற்களும், பாட்டில் களும் வீசப்பட்டாலும், பெரிய வன்முறை எதுவும் நடக்காமல், காவல் துறை நிதானப்போக்கைக் கையாண்டுள்ளது.

- குடந்தை கருணா

8.10.2020