ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 14, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

 • இன்று துவங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், இந்திய சீன எல்லைப் பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை இவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச் சினையை எழுப்ப இருக்கின்றன. திமுக சார்பில், இதனுடன், நீட் ரத்து, ஓபிசி பிரிவினர்க்கான வருமான வரம்பு உயர்வு, ஜிஎஸ்டி நிதியை மாநிலங்களுக்கு வழங்காதது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்புவார்கள் என மக்களவைத் தலைவர் கூட்டிய அலுவல் கூட்டத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

 • கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 • குடியுரிமைத் திருத்த மசோதாவை எதிர்த்து டில்லியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த பலரையும் வன்முறையாளர்கள், பிரிவினைவாதிகள் என அரசு கைது செய்கிறது. ஆனால் அடக்குமுறை ஒரு போதும் அனைவரையும் அமைதிப்படுத்திட முடியாது என தனது கட்டுரையில் மனித உரிமை ஆர்வலர் ஹரீஸ் மந்தர் எழுதியுள்ளார்.
 • மதவாத அரசு ஆபத்தானது என்பதை மறைந்த சுவாமி அக்னிவேஷ் தனது இறுதிக் காலம் வரை வலியுறுத்தி வந்தார் என டில்லி புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வர் வல்சன் தம்பு தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 • டில்லியில் குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தின் போது நடந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் என சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ், டில்லி பல்கலைக்கழகப் பேராசிரி யர் அபூர்வானந்த் போன்றோர் மீது குற்றப்பத்திரிக்கையை காவல் துறை அளிப்பது, ஜன நாயகத்தைச் சிதைக்கும் செயல் என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • நாடாளுமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்தது, நிர்வாக நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்க அரச மைப்புச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய உரிமையைப் பறிக்கும் செயல் என சி.பி.எம். கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ராஜீவ் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
 • மத்திய பிரதேசத்தில் அங்கன்வாடியில் படிக்கும் பிள்ளை களுக்கு மதிய உணவுடன் முட்டை அளிக்க வேண்டும் என்ற அமைச்சர் இமர்தி தேவியின் கருத்துக்கு, ஜெயின் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சவுகான் அரசு தடுமாறி நிற்கிறது.

தி இந்து:

 • நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று சொல்லும் நீதிமன்றம், காணொலி வழியேதான் நடைபெறுகிறது என கருத்து தெரிவித்துள்ள திரைப்பட நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவதூறு வழக்கு பதிவு செய்திட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமண்யம், தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 • மோடி ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி, தனியார்மய மாக்கல், ஜனநாயகம் மீதான தாக்கு ஆகியவற்றைக் கண்டித்து வரும் செப்டம்பர் 17 முதல் 22 வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக சிபிஎம் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 • பிரதமர் மோடி, மயில்கள் விளையாடும் தோட்டத்தில் தனது பணியைச் செய்வதாக ஊடகங்கள் புகைப்படங்களை வெளியிடுகின்றன. உண்மை நிலையை வெளியிடாமல், மயில் களும், வாத்துகளும் நம் கண்முன்னே நிறுத்தப்படுகின்றன. ஜன நாயகம் சுருங்குகிறது. இந்தியா - பாகிஸ்தானுக்கு உள்ள இடைவெளியும் சுருங்குவது போல் உள்ளது என தனது கட்டு ரையில் மூத்த பத்திரிக்கையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதி யுள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ்:

 • மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங், உடல் நலக்குறைவு காரணமாக மறைவுற்றார்.ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவராக இருந்து சென்ற வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

- குடந்தை கருணா

14.9.2020