ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 28, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • முகரம் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஊர்வலம் நடத்திட எந்த உத்தரவும் இட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • தொலைக்காட்சி வழியாக நடத்தப்படும் பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு யார் பதில் அளிப்பார்கள்? அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என அய்தராபாத் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
  • பொருளாதாரப் பின்னடைவு கடவுளின் செயல் என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார். ஆகவே மாநில அரசுகள் தங்கள் நிதி நெருக்கடிக்கு கடன் வாங்கலாம் என்றும் தெரிவித்தார்.
  • எஸ்.சி. பிரிவினரில் உள்ஒதுக்கீடு சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. எனினும் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றி, உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
  • நீட், ஜே.இ.இ. தேர்வுகளை நடத்திடுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. பீகார், மேற்கு வங்கம், அசாம், உ.பி. ஆகிய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டமாக தேர்வு நிலையத்திற்கு வருவது, கரோனா தொற்றை அதிகரிக்காதா? அசாதாரணமான சூழலில், அசாதாரணமான முடிவை அரசு எடுக்க வேண்டும். ஓர் ஆண்டு தேர்வைத் தள்ளிப்போடுவது நல்லது என்று தலையங் கத்தில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • கோயம்பேடு மார்க்கெட் - பழம், பூ விற்பனைக் கூடத்தை செப்டம்பர் 18ஆம் தேதியிலும், காய்கறி சந்தையை செப்டம்பர் 28ஆம் தேதியிலும் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
  • நீட், ஜே.இ.இ. தேர்வை ஒத்தி வைக்க பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் சில உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் நிலையில், ஆந்திரம், தெலுங்கானா, கேரள மாநிலமும் வழக்கு தொடர வலியுறுத்தி, அந்த மாநில முதல்வர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் :

  • எஸ்.சி. பிரிவினரில் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் வரவேற்றுள்ளது. லாலு தலைமையிலான ஆர்.ஜே.டி., மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் உள் ஒதுக்கீடு செய்வது சரியாக இருக்காது என்று கூறியுள்ளது. பா.ஜ.க. இதில் அமைதி காக்கிறது.

- குடந்தை கருணா

28.8.2020