ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 18, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • பீகாரில் ஆர்.ஜே.டி. கட்சி ஆட்சி அமைத்தால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மோடி அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்கள் நீக்கப்படும் என மகாபந்தன் கூட்டணி சார்பாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • அய்ந்தாண்டுகளில் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என 2016 தேர்தல் அறிக்கையில் அதிமுக உறுதி மொழி அளித்தது. ஆனால், அரசு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருகிறது. தமிழகத்தில் 2016இல் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? 2017, 2018, 2019இல் எத்தனை கடைகள் மூடப்பட்டன? தற்போது எத்தனை கடைகள் உள்ளன? 2016 முதல் ஆண்டுவாரியாக டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு? ஆகிய நான்கு கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இலங்கையில் கோத்தபய ராஜபக்சே ஆட்சியில், பிரதமர், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்களைக் குறைத்திட கொண்டுவரப்படும் 20-ஏ சட்டத்திருத்தத்திற்கு, அந்நாட்டு புத்த பிக்குகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • மோடி அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநில பாஜக பொதுச் செயலாளர் மல்விந்தர் சிங் காங், அக் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகியுள்ளார்.
  • குஜராத் மாநிலத்தில் பட்டியிலின சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தேவ்ஜி மகேஷ்வரி கொல்லப்பட்டதற்கு, பார்ப்பனர் கள் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டதால்தான் என குஜராத் காவல்துறை அறிவித்துள்ளது.
  • பிரதமர் மோடி தனக்கு நாடாளுமன்றத்தில் உள்ள எண்ணிக்கை பலத்தின் மூலம் பொருளாதார சீர்திருத்தத்தை செவ்வனே செய்ய முடியும். ஆனால், மோடி, முதலாளிகளின் ஆதரவாளராக உள்ளார் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நவம்பர் 1 முதல் போராட்டம் நடத்தப்போவதாக குஜ்ஜார் மகாபஞ்சாயத்து அமைப்பு அறிவித்து உள்ளது.
  • மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலில் உ.பி.யில் உள்ள நிலை மையைப் பார்க்கட்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

  • உலகில் மக்கள் பட்டினியால் வாடும் 107 நாடுகளில் இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளது. ஆசிய நாடுகளான நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டினியைப் போக்குவதில் இந்தியாவை விட முன்னேறி உள்ளன என அயர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை அளித்துள்ளன. இந்தியாவில் வளர்ச்சி ஒரு சிலரால் மட்டுமே அனுபவிக்கப்படுகிறது என ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பொருளாதார பேராசிரியர் ஹிமான்சு கருத்து தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

18.10.2020