ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 19, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

 • இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக, பா.ஜ.க.விற்கு ஆதரவாக உள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி, அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உரிய விசாரணை நடத்தி, இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் நிறுவன நிர்வாகிகளை மாற்றி அமைக்குபடி கேட்டுள்ளது.
 • மத்திய பிரதேச மாநிலத்தின் வேலைகள் அனைத்தும் அந்த மாநில மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார்.
 • கரோனா தொற்று அதிகமாகப் பரவி வரும் நிலையில், மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் எழுதிட தடை விதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உரியது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 • தேர்தல் அதிகாரி அசோக் லவசா தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தைக் குடியரசுத் தலை வருக்கு அனுப்பியுள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியில் துணைத் தலைவர் பதவிக்குச் செல்ல இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைப் பேச்சில் எந்த தவறும் இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தவர். அதேபோல், தேர்தல் நடத்தை விதிமுறைகளை பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீறினார் என்றும் அறிக்கை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஜூலை மாதத்தில் மட்டும் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றும், மார்ச் மாதம் முதல் இதுவரை ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:

 • டில்லியில் ராம் லீலா விழாவை இந்த ஆண்டும் நடத்து வோம் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
 • பி.எம்.கேர்ஸ் என பிரதமர் துவக்கிய டிரஸ்ட் பற்றி எந்த தணிக்கையும் தேவையில்லை; அதில் உள்ள பணத்தை அரசின் எந்த நிதிக்கும் அளித்திட உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு இவற்றுக்கு எதிராக அரசுகள் இருக்கலாம் என்பதாக உள்ளது என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
 • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தி டெலிகிராப்:

 • அண்மையில் பாரக் ஒபாமாவின் துணைவியார் மிசைல் ஒபாமா ஜனநாயகக் கட்சிக்கான தனது தேர்தல் பரப்புரையில், டிரம்ப் பற்றியும் அவரது ஆட்சி பற்றியும் விமர்சித்து உரை நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு, இதனை இந்தியாவில் ஒப்பிடுவது தற்செயலாக இருக்கும் என டெலிகிராப் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.
 • சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த தன்னை நேர்முகத் தேர்வுக்குக் கூட அழைக்கவில்லை என தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுக்தேவ் போய், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
 • பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் தயாரிக்கும் ஹெலிகாப்டரை நாங்கள் வாங்க முடியாது என மத்திய அரசின் கடற்படை கூறியுள்ளது.

- குடந்தை கருணா

19.8.2020