ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 11, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் பிடன் இணைய வழி வாக்குவாதத்தை டிரம்ப் எதிர்த்ததால்  நிறுத்தப்பட்டது.

பீகார் மாநில தேர்தல் பரப்புரையை பாஜக தேசியத் தலைவர் நாளை கயா மாவட்டத்தில் துவக்குகிறார்.பிரதமர் மோடி, இருபது பேரணிகளில் பேச இருக்கிறார்.

தொலைக்காட்சி ஊடக டி.ஆர்.பி. மோசடி குறித்து விசாரணைக்கு ரிபப்ளிக் டிவி நிதி ஆலோசகரை மும்பை காவல் துறை அழைத்தும், விசாரணைக்கு வரவில்லை.

டெக்கான் கிரானிகல், சென்னை:

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் மாநகராட்சிப் பள்ளியை தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரின் முயற்சியால்,  சிறப்பான முறையில் மெட்ரோ ரயில் மாடலில் புதுப்பித்ததன் காரணமாக, மாணவர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டு வரை 70 ஆக இருந்து, இந்த ஆண்டு 300 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:  வெளி நாட்டில் இருந்த வந்த மதத்தை தழுவிய முஸ்லீம்கள் இந்தியாவில்தான் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். காசி, மதுராவிலும் அயோத்தி போன்று போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ். துவங்காது, ஆனால் ஹிந்தி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வில்லை என அர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத், விவேக் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை கிராமத்தில்  தாழ்த்தப்பட்ட பெண் ஊராட்சி தலைவியை இருக்கையில் அமரவிடாமல் தடுத்த குற்றத்திற்காக, ஊராட்சித் துணைத்தலைவர் மோகன்ராஜை காவல் துறை தேடி வருகிறது. ஊராட்சி செயலாளர் சிந்துஜா, ஆறாவது வார்டு உறுப்பினர் சுகுமார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூகப் புரட்சியாளர்கள் ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது புரட்சிகர சிந்தனைகளால், தாழ்த்தப்பட்ட மக்கள் நாட்டின் சில பகுதிகளில் அரசியல்ரீதியாக ஒன்றிணைந்தாலும், அவர்களது சமூக அந்தஸ்து ஓரளவுதான் உயர்ந் துள்ளது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில், ஹாத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் படுகொலைக் குறித்து குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் பரந்த நோக்கத்திலிருந்து குறுகிய நோக்கமுடைய ஒரு ஜனநாயகமாக திட்டமிட்டு மாற்றப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது என மூத்த பத்திரிக்கையாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
பீமா கொராகான் சம்பவத்திற்காக ஜார்கண்ட் மா நிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 83 வயது பாதிரியார் ஸ்டான் ஸ்வாமியை தேசிய புலனாய்வு ஏஜென்சி கைது செய்துள்ளதை, ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமண்ட் சோரன் மற்றும் காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
உ.பி. ஹாத்ராஸ் பெண் பாலியல் கொலை குறித்த வழக்கை சி.பி.அய்.க்கு மாற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி ரமணா, தெலுகு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அக்கட்சிக்கும் ஆதர வாக வழக்குகளில் நடந்து கொள்கிறார் என குற்றம் சாட்டி, ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

- குடந்தை கருணா
11.10.2020