ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 26, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

 • மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்ததையடுத்து, அவரது வழக்கை வேறொரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்குக் குத்தகை விடுவதற்குத் தடை விதிக்க முடியாது என கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 • பெண்கள் திருமண வயதை உயர்த்திடும் மோடி அரசின் முடிவுக்கு, பல சிவில் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்யாமல், திருமண வயதை உயர்த்துவது பெண்களுக்கு, குறிப்பாக விளிம்பு நிலை சமூகப் பெண்களுக்குப் பாதகமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
 • நாடாளுமன்றக் கூட்டத்தை செப்டம்பர் 14 முதல் அக் டோபர் 1ஆம் தேதி வரை நடத்திட நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் சபாநாயகருக்குப் பரிந்துரை செய்துள்ளது.
 • டெக்கான் கிரானிகல், சென்னை:
 • கரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மூடிக்கிடக்கும் கோயம்பேடு சந்தையைத் திறப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நாளை முடிவெடுக்கும் என செய்திகள் வந்துள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் :

 • கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க, நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
 • நீட் தேர்வு ரத்து, ஜிஎஸ்டி குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காணொலி மூலம் உரையாட உள்ளார்.
 • அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணைத் தலைவர் போட்டிக்கு, கறுப்பினத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது போன்று, பெரும் பான்மைவாதம் பேசும் இந்தியாவில் சாத்தியப்பட்டிருக்காது. இங்கே அதுபோல் நடந்திருந்தால், சிறுபான்மையினரைத் தாஜா செய்யும் செயல் என வர்ணிக்கப்பட்டிருப்பார் என தனது கட்டுரையில் நிருபமா சுப்ரமண்யன் எழுதியுள்ளார்.

தி இந்து:

 • நீட், ஜே.இ.இ. தேர்வுகளை மேலும் தள்ளி வைத்திடுவது குறித்து யோசனை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை கல்வி அமைச்சக அதிகாரி மறுத்துள்ளார்.

தி டெலிகிராப்:

 • ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

- குடந்தை கருணா

26.8.2020