ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 25, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றுவது, கரோனா காலத்தில் நாடாளுமன்றம் நடத்தப்பட் டதே வீண் என்பதுபோல ஆகி விட்டது. எதைக் கண்டு பிரதமர் அஞ்சுகிறார் என பர்சா வெங்கடேஸ்வர ராவ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
  • மோடி அரசின் ரயில்வே துறை இணை அமைச்சர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இப்போதாவது, அரசு, சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். மக்களுக்கு உண்மை நிலவரத்தைக் கூற வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
  • வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாபில் விவசாயிகள் மூன்று நாள் ரயில் மறியல் போராட்டத்தைத் துவக்கினர். இன்று மாநில அளவில் முழு அடைப்பு என்றும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • சட்டப்பேரவையில் குட்கா பொருட்களை கடந்த 2017இல் சட்டமன்றத்திற்கு எடுத்துச் சென்ற விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமைக் குழு அனுப்பிய தாக்கீதுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தி டெலிகிராப்:

  • வேளாண் மசோதாவிற்கு விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு, போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் வீராட் கோலியிடம், உடல் பயிற்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
  • விவசாயிகளின் போராட்டத்திற்கு, நாடு முழுவதும் உள்ள பத்து முதன்மையான தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • ஜி.எஸ்.டி. நிதி வசூலில் மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டிய பங்கை மத்திய அரசின் தொகுப்பு நிதியில் ரூ.47,272 கோடி ரூபாயை மத்திய அரசு வைத்து, அதனை வேறு காரணங்களுக்கு செலவிட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித் துள்ளார்.
  • டில்லியில் குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத் தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைக்கு காரணமானவர்கள் என மாணவர்கள், மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுப்பது, யாரும் எந்த கருத்தையும் பேசக் கூடாது என்கிற தன்மையில் உள்ளது என பத்திரிக்கை ஆசிரியர் பிரதாப் பானு மேத்தா தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

டெக்கான் ஹெரால்டு:

  • பிரெஞ்சு நாட்டு டசால்ட் அவியேசன் நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவம் வாங்கியுள்ள ரபேல் விமான தொழில் நுட்ப பரிமாற்றம் இதுவரை நடைபெறவில்லை என மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி அந்த பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது. சென்ற ஆண்டே, இதுபற்றி காங்கிரஸ் குற்றம் சாட்டியதை மத்திய அரசு மறுத்தது. ஆனால் தற்போது தணிக்கை அதிகாரி அது குறித்து அறிக்கை அளித்துள்ளார்.

- குடந்தை கருணா

25.9.2020