ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 10, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • கரோனா தொற்று நான்காவது முழு அடைப்பு தளர்வுக்குப் பின், மேலும் அதிகமாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் வரும் மாதங்களில் விழாக்கள் நடைபெற உள்ளன. ஏற்கெனவே, கேரளாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்திற்குப் பிறகு, கரோனா தொற்று அதிகமாகியுள்ளதை கருத்தில் கொண்டு, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்து மத்திய அரசு புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில், ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி,’ இயங்கி வருகிறது. அங்கு துறை சார்ந்த  இரண்டு ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதில், தமிழ் மொழி புறக் கணிக்கப்பட்டு இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம்  பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும்  கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு நேற்று திடீரென ஒரு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதில், ‘மத்திய  தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப் பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப் பட்டுள்ளது. இதே போன்று சமஸ்கிருதம், கன்னடம்,  தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் உள்ளிட்ட செம்மொழிகளும் சேர்க்கப்பட்டு உள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

தி இந்து:

 

  • காற்று விசையாழி மூலம் தண்ணீர் எடுக்கலாம் என்ற பிரதமர் மோடியின் பேச்சைக் கிண்டல் செய்து பிரதமரிடம் யாரும் நெருங்கி பேச முடியவில்லை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இது சம்மந்தமான தொழில் நிறுவனங்களும், விசையாழியில் இருந்து தண்ணீர் தயாரிப்பது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளனர்.

தி டெலிகிராப்:

  • மருத்துவப் படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்பதற் காக இடம் அளிக்க முடியாது. தகுதி அடிப்படையில் தான் இடம் அளிக்க வேண்டும். என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • உ.பி. ஹாத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் மரணம் குறித்து, காவல்துறை அதிகாரிகள், பெண்ணின் உடலை எரிக்கும் வீடியோ ஒன்று தொலைக்காட்சி ஊடகத்தில் வெளியானது உண்மை எனில், பெண்ணின் பெற்றோர் அதில் கலந்து கொள்ள தடுக்கப் பட்டதற்கு சாட்சியாக விளங்கும்.
  • அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் தருணத்தில், பீகார் மாநிலத் தேர்தலில், பாஜக தவிர்த்து ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு சம தள வாய்ப்பு உருவாக்காமல், தேர்தல் ஆணையம் எப்படி நேர்மையான தேர்தலை நடத்த முடியும் என சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

- குடந்தை கருணா

10.10.2020