ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
July 27, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

  • ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தை வரும் ஜூலை 31 முதல் நடத்திட கவர்னருக்கு அம்மாநில முதல்வர் அசோக் கேலாட் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். (கடைசித் தகவல்: ஆளுநர் மீண்டும் மறுப்பு).
  • காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு விரைவில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
  • மும்பை சினிமா உலகமான பாலிவுட்டில் சிறந்த படங் களில் இசை அமைக்க தனக்கு எதிராக சிலர் தடை ஏற்படுத்தினர் என இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:

  • பீகார் பள்ளிகளில், கரோனா காரணம் கூறி, மதிய உணவு நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை செயலா ளருக்கு பாட்னா நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தி இந்து, டில்லிப் பதிப்பு:

  • நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் விமர்சனங்களை முடக்கினால் நீதித்துறை மீது மரியாதை கிடைக்கும் என நீதிபதி கள் நினைக்கிறார்கள் என சென்னை மற்றும் டில்லி உயர் நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தனது கட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
  • அயோத்தியில் ராமன் கோயில் பூமி பூஜை நிகழ்வை இணையம் வழியே நடத்தலாம். கரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில், லட்சக்கணக்கானோர் திரண்டிடுவர் என சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

27.7.2020