ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
July 18, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

  • இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை பத்து லட்சத்தைக் கடந்து விட்டது. 21 நாட்களில் கொரோனோவை வீழ்த்துவேன் என பிரதமர் மோடி மார்ச் 24ஆம் தேதி அறிவித்தார். மே 15இல், கரோனா பரவும் தன்மை நிறுத்தப்படும் என நிதி ஆயோக் தெரிவித்தது. ஆனால், தற்போது தினமும் 30000 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அரசு அவசர நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், ஆகஸ்டு 15-ல், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 லட்சமாக ஆகும் என தலையங்கச் செய்தி எச்சரித்துள்ளது.
  • மோடி ஆட்சியில், காங்கிரஸ் கட்சி ஆளும் மா நிலங் களில், ஆட்சியைக் கவிழ்க்க, ராஜஸ்தான் அசோக் கேலாட், மத்திய பிரதேசம் கமல் நாத், கர்நாடகாவில் சிவ்குமார், மகாராஷ் டிராவில் சரத் பவார் என அனைவர்மீதும் வருமான வரித் துறையைப் பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்க, இத்த கையை அறமற்ற யுக்திகளை மோடி அரசு கையாள்கிறது என எழுத்தாளர் ஆனந்த் கே.சகாய் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
  • ராஜஸ்தானில் கேலாட் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க, மத்திய பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ஈடுபட்டதாக, தொலைபேசி உரையாடலை வெளியிட்டு, அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
  • இம்மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெற இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, தற்போதுள்ள சட்ட நடைமுறை களால், தங்களது குடும்பத்திற்கும் தாமதமாக நீதி கிடைத்தது எனக் கூறியுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:

  • ஒரே நாடு, ஒரே கல்வி என்பதை வலியுறுத்தி பொதுப் பாடத்திட்டம் வேண்டும் எனக் கோரும் பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:

  • மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு பிப்ரவரி 2018இல் அனுமதி வழங்கிய விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா எந்தவித பாதிப்பும் இல்லாமல் பதவி ஓய்வு பெற்றார்.
  • எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவராக, இந்நிறுவனத்தின் தலைவராக இதுவரை இருந்து வந்த சிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் (வயது 38), பொறுப்பேற்றுள்ளார். தகவல் தொழில் நுட்பத்துறையில் தலைமை பொறுப்புக்கு வரும் முதல் பெண்மணி ஆவார்.

தினகரன், சென்னை:

  • மருத்துவப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முடிவுற்று, தீர்ப்பு வரும் ஜூலை 27ஆம் தேதி என அறிவிக்கப் பட்டுள்ளது.

தி இந்து, டில்லிப் பதிப்பு:

  • பசு மாட்டு மூத்திரத்தைக் குடித்தால், கரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என மேற்கு வங்க பாஜக தலை வர் திலீப் கோஷ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல், ஜே.இ.இ. தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அய்.அய்.டி. படிப்பில் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சேர்க்கப்படுவர் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

18.7.2020