ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 19, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • நீட் தேர்வு தமிழக கிராமத்தில் உள்ளவர்களிடம் ஏன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? மாணவர்கள் நம்பிக்கையை எப்படி தகர்த்தது என கட்டுரையாளர் பாபு ஜெயகுமார் விவரித்துள்ளார்.
  • விவசாயிகளை நிலங்களற்றவர்களாக்கி தங்களது சொந்த பயன்பாட்டிற்குக்கூட தானியங்களை வைக்கவிடாது, செயற்கையான ஒரு சந்தையை, கார்ப்பரேட்டுகளின் வளத்திற்காக உருவாக்குவது ஒன்று தான் மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று மசோதாக்களின் நோக்கமாகும். எதிர்க்கட்சிகள் வலுவான எதிர்ப்பை உருவாக்கி மசோதாக்களை மோடி அரசு திரும்பப் பெற செய்யவேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
  • நாடே கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது இருக்கும் நாடாளுமன்றத்தை இடித்து விட்டு, சுற்றுச்சூழல் பற்றி கவலை கொள்ளாமல் புதிய நாடாளுமன்றம் கட்டுவோம் என மோடி அரசு செயல்படுவதை தனது கட்டுரையில் எழுத்தாளர் சோபா தே கடுமையாக எதிர்த்துள்ளார்.
  • பிரதமர் மோடியின் பி.எம்.கேர்ஸ் என்ற அறக்கட்டளை குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைகளில் முறைகேடு உள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூரின் பேச்சால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. பின்னர் தனது கருத்தை அமைச்சர் திரும்பப் பெற்றார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் மோடி அரசின் முடிவைக் கண்டித்து, தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் இன்று இரவு 8 முதல் 8.10 வரை வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து எதிர்ப்பைத் தெரிவிக்க எஸ்.ஆர்.எம்.யூ, தலைவர் கண்ணையா அறிக்கை ஒன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி டெலிகிராப்:

  • விவசாயத்தைப் பாதிக்கும் மூன்று மசோதாக்கள், ஏற்கெனவே காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது தான் என பிரதமர் மோடியும், விவசாயத்துறை அமைச்சர் தோமர் கூறியதையும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ப.சிதம்பரம் கடுமையாக மறுத்துள்ளார். தங்களது கட்சி, ஒவ்வொரு சிற்றூர்களிலும் விவசாய சந்தை உருவாக் கப்பட வேண்டும் என்று கூறியது. இதற்கு மாறாக மோடி அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்கள் உள்ளன என சாடியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • அரசுத் துறைகளில், குறிப்பாக தொலைத்தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல். துறையில் பதவி உயர்வில் பழங்குடியின தாழ்த்தப் பட்ட பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்த வில்லை என பழங்குடியின தாழ்த்தப்பட்ட பிரிவினர்க்கான நாடாளு மன்றக் குழு தெரிவித்துள்ளது.

டெக்கான் ஹெரால்டு:

  • அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணி வெளியிட்ட பாடலில் பெரும்பகுதி இந்தி வார்த்தைகளே உள்ளது என கருநாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் நாட்டில் சென்னை அய்.பி.எல். அணியின் பாடல் தமிழில் உள்ளது போல் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் பந்து வீச்சாளர் தொட்டா கணேஷ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தி இந்து:

  • புலம் பெயர் தொழிலாளர்கள் கரோனா தொற்றின் காரணமாக நடந்தே சென்று பலர் இறந்ததை நாடே கண்டது. அந்தக் கொடுமை யைக் காணும்போது கண்ணீர் வருகிறது. ஆனால், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை தெரியாது என எப்படி கூற முடியும்? இது குறித்த தகவல்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்..

- குடந்தை கருணா

19.9.2020