ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 6, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • இந்தியாவில் கரோனா இறப்புக் கணக்கு 1.8 சதவீதம் என்பது சந்தேகத்திற்குரியது. இறப்பு எண்ணிக்கை அரசால் குறைத்துக் காட்டப்படுகிறது என அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியிடப்படும் ’லான்செட்’ எனும் மருத்துவ இதழ் கூறியுள்ளது.
  • திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 8-ஆம் தேதி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின், குஜராத், உ.பி. உள்ளிட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்துள்ளது. ஆனால், தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் திற்கு எந்த அழைப்பும் இல்லை. தாங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக அச்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • அனைத்து மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டாம் என்ற மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும் பப் பெற வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கு இது வரை கட்டணமில்லா கல்வியை வழங்கி வந்த டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகம், நடப்பு கல்வி ஆண்டு 2020-21 முதல், வருமான அடிப்படையில் கட்டணச் சலுகை அளித்திட முடிவு செய்துள்ளது.
  • கடந்த எட்டு காலாண்டுகளாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 8.2 சதவீத ஜிடிபி தற்போது 3.2 சதவீதமாக சரிந்துள்ளது. பண மதிப்பிழப்பில் இருந்தே இந்த சரிவு துவங்கியது. ஆனால் மோடி அரசு, எல்லாம் நல்லபடியாக இருக்கிறது என்கிறது. பாலைவனத்தை சோலையாக இருக்கிறது என நிதி அமைச்சர் சொல்கிறார் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
  • குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச தனியார்மயம் எனும் கொள்கையை மோடி அரசு பின்பற்றுகிறது. கரோனா தொற்று ஒரு சாக்கு அவ்வளவுதான். நிரந்தரமற்ற பணியாளர்கள் மட் டுமே அரசில் இருக்க வேண்டும் என மோடி அரசு கருதுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதி விட்டுள்ளார்.
  • நாட்டின் பொருளாதார வீழ்ச்சி 23 சதவீதத்திற்கும் கீழே சென்றுவிட்டது. ஆனால், மோடி தனது வீட்டின் தோட்டத்தில் மயிலுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார். அண்டை நாடான சீனா, நமது எல்லையில் பிரச்சினையை உருவாக்கி யுள்ளது. படித்த இளைஞர்கள் வேலையின்றி சாலைக்கு வந்து போராடும் சூழல் உள்ளது. ஆனால், இவை எதுவும் நமது இந்தி, ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பொருட்டு அல்ல. ஒரு இந்தி நடிகரின் மரணத்தைப் பற்றி துப்பறிந்துக் கொண்டிருக்கிறார்கள் என எழுத்தாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் சாடியுள்ளார்.

தி இந்து:

  • அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்க்கு தாரை வார்க்கும் செயல் மூலம் தற்சார்பு இந்தியா (ஆத்ம நிர்பார் பாரத்) என்பதை சரணடையும் இந்தியா (ஆத்ம சம்பர் பன் பாரத்) என்பதாக மோடி அரசு மாற்றியுள்ளது என சி.பி.எம். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
  • இந்தியாவில் தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு 14ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது..

- குடந்தை கருணா

6.9.2020