ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
November 9, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

  • கரானா தொற்று தற்போது மகாராட்டிரா, டில்லி, கேரளா மா நிலங்களில் மீண்டும் அதிகமாகி வருகிறது. மேலும் வரும் மத விழா நாட்களில் அதிகமாகும் என பலரும் கவலை கொள் ளும் நிலையில், மத்திய அரசு வாளா இருக்காமல் உரிய அறி வுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
  • அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக வழங்கப்படும் ஹெச்1-பி விசாவை அதிகப்படுத்த வும், அய்ந்து லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கவும் முடிவு செய்துள்ளார்.
  • அமெரிக்க அதிபராக உள்ளவர்கள் இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அமெரிக்க வரலாற்றில், டிரம்ப் உட்பட பத்து அதிபர் கள் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படாமல் தோற்கடிக்கப் பட்டுள்ளனர்.
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஜோ பைடன் அதிபராகிறார். முதன் முறையாக ஒரு பெண்மணி கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்று உள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், தான் துணை அதிபர் பதவிக்கு வரும் முதல் பெண்மணியாக இருக்கலாம். ஆனால், கடைசிப் பெண்மணி அல்ல என்றார். ஒரு பெண்ணை, துணை அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுத்து, இதுவரை இருந்து வந்த தடைகளை ஜோ பைடன் உடைத்துள்ளார் என பெரு மிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • பீகார் மாநிலத் தேர்தலில் ஆர்.ஜே.டி. கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வந்துள்ள சூழலில், வெற்றியை அடக்கத்தோடு எற்றுக் கொள்ள வேண்டும். எந்தவித ஆர்ப் பாட்டமும், வெற்றிக் களியாட்டங்களும் செய்துவிடக் கூடாது என ஆர்.ஜே.டி. கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் வேட் பாளர் தேஜஸ்வி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் தற்போது துணை அதிபராக இந்திய வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது போன்று இரு நூறுக்கும் மேல் அமெரிக்காவில் வாழ்கின்ற இந்தியர்கள் சட்டமன்றங்கள், பள்ளி நிர்வாகப் பொறுப்புகள், நகர அமைப் பில் பதவிகள் என பல்வேறு பதவிகளில் வெற்றி பெற்றுள்ளனர்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • பண மதிப்பிழப்பு அறிவிப்பு நவம்பர் 8, 2016இல் நடை பெற்றதற்குப் பின், நாட்டில் லஞ்சம் - ஊழல் பெருகியுள்ளது என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.
  • புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணைக்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் தராமல் திட்டமிட்டு தாமதப்படுத்துவதாக புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

  • குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் பதவியை விட்டு விலகிய தமிழகத் தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகார் சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றிட முடிவு செய்துள்ளார்..

குடந்தை கருணா

9.11.2020