ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 5, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • நாடு முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறிய மற்றும் பெரிய அளவிலான பேரணிகளை நடத்தி மோடி அரசுக்கு எதிராக கண்டனங்களை வெளிப்படுத்துவது குறித்து மோடி அரசும், பா,ஜ,க,வும் சிறிதும் கவலைப்படவில்லை. தங்களது இந்து வாக்கு வங்கி போதும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என கல்கத்தாவைச் சேர்ந்த பத்திரிக் கையாளர் சிக்க முகர்ஜி தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.
  • பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியை ஏற்க முடியாது என தெரிவித்து ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆனால், மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்துள்ளது.
  • ஹாத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் பாலியல் மரண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் ஆதரவு தெரிவித்து, பா,ஜ,க, எம்.எல்.ஏ. ராஜ்வீர் சிங் பகல்வான் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • பஞ்சாப் மாநிலத்தில் மோகா மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் மசோதா எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி வந்ததும், இம்மசோதாக்கள் குப்பை கூடையில் வீசப்படும் என தெரிவித்தார். தற்போது மோடி அரசு, மக்களுக்கான அரசு அல்ல. அம்பானி, அதானிகளுக்கான அரசு என சாடினார்.
  • தமிழ் நாட்டில் ரயில் பயண சீட்டு குறித்து இந்தியில் குறுஞ்செய்தி பயணிகளுக்கு அனுப்பப்படுவதற்கு கடும் எதிர்ப்பினை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கையில், பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்த கருத்துக்களை மீண்டும் உறுதிப்படுத்துவதாக லிபரான் தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளார்கள். ஆகவே நாம் இதுவரை நம்பிய உண்மையை மறு பரிசீலனை செய்திட வேண்டும். யாருடைய கட்டளையின் காரண மாகவும் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அது தானாகவே இடிந்து விழுந்து விட்டது என்று பொருள். சட்டத்தின் ஆட்சி மீறல், அரசியலில் மதம், மதத்தில் அரசியல் இவை குறித்து புதிய வியாக் கியானங்கள் நமக்கு சொல்லித் தரப்படுகின்றன என மூத்த பத்திரிக் கையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

டெக்கான் ஹெரால்டு:

  • ஜி.எஸ்.டி. வரி வசூலில் மாநிலங்களுக்கு தர வேண்டிய பங்கு தரப்பட வேண்டும் என பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மா நில முதல்வர்கள் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசும் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு உறுப்பினர். மாநிலங்களுக்கு கட்டளையிடுவதை நிறுத்த வேண்டும் என கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் அய்சக் தெரிவித்துள்ளார்.

தி இந்து:

  • ஆங்கிலம் ஒரு இந்திய மொழி என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் ஆங்கிலத்தை இந்திய மொழியாக அங்கீகாரம் செய்ய மறுப்பது இந்தியை மேலும் திணிக்கும் முயற்சியாகும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
  • உ.பி. ஹாத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்த தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத் திட வலியுறுத்தி திமுக மகளிரணி சார்பில் கனிமொழி எம்.பி. தலை மையில் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் இன்று மாலை நடத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

5.10.2020