ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 5, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • கரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த தடை விதிக்கக் கோரி எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மா நிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திட்டமிட்டபடி, வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.
  • கன்னியாகுமரி மக்களவை உள்ளிட்ட காலியான 65 தொகுதிக்கு, பீகார் தேர்தல் நடைபெறும் நாட்களில் இடைத் தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட 22 அலுவல் மொழிகளில் வெளியிடுவது இயலாது ஒன்று. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு டில்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்துள்ளது.
  • காங்கிரஸ் மற்றும் ஆளும் பாஜக ஆகியோரின் எதிர்ப்புக்குப் பின்னர் முக நூல் நிறுவனம் எந்த சார்பும் இன்றி செயல்படும் என்ற உறுதிமொழியை தந்துள்ளது. ஆனாலும், அமெரிக்காவில் இது போன்ற ஒரு குற்றச்சாட்டின் போது, முக நூல் நிறுவனர் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதுடன், அய்ந்து பில்லியன் டாலர் அபராதமும் செலுத்த வேண்டியிருந்தது. அத்தகைய ஒரு வாய்ப்பை நமது நாடாளுமன்றம் இழந்து விட்டது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பீகார் அரசியலில் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா நிதிஸ்குமார் கூட்டணியில் சேர்ந்ததன் விளைவாக, ஏற்கெனவே கூட்டணியில் இருக்கும் ராம் விலாஸ் பஸ்வான் கட்சியான லோக் ஜன்சக்திக் கட்சி வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து முடிவெடுக்க செப்டம்பர் 7-ஆம் தேதி அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

தி இந்து:

  • 12 கோடி வேலை வாய்ப்புகள் மறைந்து விட்டது. அய்ந்து டிரில்லியன் டாலர் பொருளாதரம் மறைந்து விட்டது. நாட்டின் பாதுகாப்பும் வளர்ச்சியும் மறைந்து விட்டது. ஏதேனும் கேள்வி கேட்டால், பதில் மறைந்து விடுகிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
  • பணியாளர் தேர்வு ஆணையம் 2017இல் நடத்திய தேர்வின் அடிப்படையில் இன்னமும் நியமனம் செய்யப்பட வில்லை. 2018 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. 2019 தேர்வுகள் நடத்தப்படவேயில்லை. 2020-க்கான காலியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டதற்கு, தேர்வு இல்லை. தேர்வு நடந்தாலும், முடிவுகள் வெளியிடவில்லை. முடிவுகள் வந்தாலும், நியமனங்கள் இல்லை என பிரியங்கா காந்தி வதேரா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

  • காஷ்மீரில் உருது அலுவல் மொழி என 131 ஆண்டு களாக இருந்ததை மாற்றி இந்தி உள்ளிட்ட அய்ந்து மொழிகளை அலுவல் மொழியாக மோடி அரசு இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவித்ததற்கு, அம்மாநிலத்தின் முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப் பைத் தெரிவித்துள்ளனர். இது இந்தியை அலுவல் மொழியாக்க நடத்தப்படும் சதி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

- குடந்தை கருணா

5.9.2020