ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 13, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கார், ஸ்கூட்டர், வீடு விற்பனை என்ன நிலையில் இருந்ததோ அதே நிலைதான் இன்று உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கிறார்கள். பிரச் சினை இருக்கிறது என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே தீர்வு காண முடியும் என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டு உள்ளார்.
  • பீகார் மாநில தேர்தலில், பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட் பாளர்களில் பாதி பேர் பார்ப்பனர், ராஜ்புத் உள்ளிட்ட உயர்ஜாதியினர்.
  • ஹாத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் கொலை குறித்த லக்னோ நீதிமன்ற விசாரணையில், பெண்ணின் குடும்பத்தினர் சாட்சியம் அளித்தனர். உடலை காவல்துறையினர் தங்களை அனு மதிக்காமல் எரித்து விட்டனர் என தெரிவித்தனர்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • நீட் தேர்வை செப்டம்பர் 13ஆம் தேதி எழுத முடியாதவர்கள், அக்டோபர் 14ஆம் தேதி தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் அக்.16ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • அண்ணா பல்கலைக்கழகம் குறித்து தன்னிச்சையாக துணை வேந்தர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவரை மாநில அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக, வலியுறுத்தி யுள்ளது.
  • வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக ஆர்.ஜே.டி. சட்டீஸ்கர் கிஷான் தலைவர், காங்கிரஸ் எம்.பி. பிரதாபன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • பாஜக ஒரு தீய சக்தி, மிகப்பெரிய தொற்றுநோய். மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை. எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

தி இந்து:

  • ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் கடன் பெற் றுக் கொள்ளலாம் என மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நிராகரித்தன. ஆனால், ஆளும் கட்சிக்கு சாதகமாக சில மாநிலங்கள் செயல்படுவது, அந்த மாநில நலனை அடகு வைப்பதாகும் என அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
  • மத்திய நிதி அமைச்சர் நிதி ஊக்குவிப்பு என்ற தற்போதைய அறிவிப்பின் மூலம், ஏற்கெனவே மோடி அரசு பெரும் விளம்பரத்தோடு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி ஆத்ம நிர்பார் திட்டம் பெரும் தோல்வி அடைந்ததை அரசு ஒப்புக் கொள்வதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

  • டில்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில், ஓபிசி பிரிவினர்க்கான சான்றிதழ் குறித்து, நிர்வாகம் முரண்பாடான நடவடிக் கையால், ஓபிசி பிரிவினர் பலர் பாதிக்கப்படுவதாக தேசிய பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. உயர்ஜாதி பொருளாதார பின்னடைந்தோர் குறித்த சான்றிதழில் நிர்வாகம் எந்த ஆட்சேபணையும் இன்றி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- குடந்தை கருணா

13.10.2020