ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 24, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • இந்திய சீன எல்லையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி உள்ளே ஆக்கிரமித்ததை பிரதமர் மோடி மறைத்து விட்டார். நமது ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். கரோனா

தொற்று காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் பீகார் நோக்கி வருவோர்க்கு உரிய உதவியும் மோடி அரசு செய்யவில்லை என பீகார் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

  • பெண்களை அவமதித்துவிட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் மீது பாஜக குற்ற சாட்டியுள்ளது. பெண்களை இழிவாகக் கருதும் மனுஸ்மிரிதியை எரிக்கும் போராட் டத்தை விசிக அறிவித்துள்ளது.
  • பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன். காஷ்மீரில் மீண்டும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நிலை நாட்டப்பட வேண்டும் என மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முக்தி தெரிவித்துள்ளார்.
  • வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்தியப் பொருளாதாரம் மந்த நிலை அடைந்துள்ளது. இது தொடருமானால், 2021-ல் ஜிடிபி வீழ்ச்சி அதிகமாக இருக்கும். இதில் இருந்து மீள பல ஆண்டுகளாகும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கூறியுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • வன்னியர் இட ஒதுக்கீடு கோரி வரும் ஜனவரியில் போராட்டம் நடத்தப்போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
  • மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • லாலு பிரசாத்தின் ஆர்.ஜே.டி. கட்சி தேர்தல் அறிக்கையில் பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை தருவோம் என்று கூறியுள்ளதை கிண்டல் செய்த பாஜக, தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறுகிறது. ஒருவேளை 19 என்கிற எண், 10-அய் விட குறைவோ? என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

  • அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை விட இந்திய பிரதமர் மோடி அரசியல் அனுபவம் மிக்கவர்; ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் பின்புலம் உள்ளவர். முன்னவர்கள் இருவரையும் விட மோடி ஆபத்தானவர். இவரால் சிபிஅய், நீதிமன்றம் என அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். முன்னவர்கள் தேர்தலில் தோற்றால், அந்த நாட்டை விரைவில் சரி செய்ய முடியும். ஆனால் இந்தியாவில் அது சரி செய்யப்பட பல ஆண்டுகளாகும் என வரலாற்றாசிரியர் ராமசந்திர குகா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

24.10.2020