ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 10, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • மராட்டியருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட மகாராட்டிரா அரசு 2018இல் பிறப்பித்த ஆணையை அமல்படுத்த நீதிபதி எல்.என்.ராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத் தனர். சென்ற ஆண்டு மும்பை நீதிமன்றம் மராத்தியருக்கு இட ஒதுக்கீடு ஆணை செல்லும் என்றும், ஆனால், இட ஒதுக்கீடு சதவீதம் கல்வியில் 12 சதவீதம், வேலைவாய்ப்பில் 13 சதவீதம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்திட முடிவு செய்யப் பட்டது. திமுக தரப்பில் எந்தவித ஆர்வமும் காட்டாத நிலை யில், தற்போது பீகார் மாநில தேர்தலையும் கணக்கில் கொண்டு லாலு பிரசாத்தின் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த மனோஜ் ஜா எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடுவார் என தெரிகிறது.
  • கேரளாவில் எஸ்.டி.பி.அய். கட்சியைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • மராத்தியர்க்கான இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மகாராட்டிரா அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் இது பற்றி கருத்து தெரிவிக்கை யில், ஓபிசி பிரிவினர், மராட்டியர்க்கு தனி இட ஒதுக்கீடு தரு வதை எதிர்க்கவில்லை என்கிறார். மராத்தா கிரண்டி மோர்ச்சா 2017-18களில் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து இட ஒதுக்கீட்டைப் பெற்றது.

தி இந்து:

  • பள்ளிப்படிப்பில் அய்ந்தில் ஒரு மாணவரும், குறிப்பாக 9, 10ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில், மூன்றில் ஒரு வரும், தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுகிறார்கள். அந்த குடும்பங்களில், கல்விக்கான செலவீட்டில், 20 சதவீதம் பயிற்சிக்காக செலவிடப்படுகிறது என்று தேசிய புள்ளிவிவர நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நகரங்களில் உயர் வகுப்பினர் குடும்ப மாணவர்கள் 52 சதவீதம் தனியார் பயிற்சி பெறுகிறார்கள்.
  • திட்டமிட்டபடி நீட் தேர்வு செப்டம்பர் 13இல் நடைபெறும். தேதியை மற்றுவதால், பிரச்சினை தீராது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தது.

- குடந்தை கருணா

10.9.2020