ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
உயர் கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பதா
July 19, 2020 • Viduthalai • தமிழகம்

உயர் கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பதா?

மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை,ஜூலை19 உயர்கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகா ரத்தை பறித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து பல்கலைக்கழகங்கள் தாமே முடிவெடுக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல் வழங்கி இருந்தது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பல்கலை இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே ஆகவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பேரிடர் காலத்தில் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கக்கூட மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்று மத்திய பாஜ அரசு எதேச்சாதிகாரமாக நடந்துகொள்கிறது. உயர்கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்துள்ளது மட்டுமின்றி, லட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய பாஜக அரசின் போக்கு  வன்மையான கண்டனத் துக்கு உரியது.

 

இராஜஸ்தானில் காங்கிரஸ்  ஆட்சியைக்  கவிழ்க்கும் பா.ஜ.க.வின் சதி, ஆடியோ வெளியாகி பரபரப்பு

எட்டுப் பேர்  கொண்ட விசாரணைக்குழு அமைப்பு

ஜெய்ப்பூர், ஜூலை19 இராஜஸ்தானில் காங்கிரஸ்  ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ.க. சார்பில் குதிரைப் பேரம் பேசப்பட்டு வருகிறது என்று அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். இதுகுறித்து சிறப்பு காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா முகேஷ் ஜோஷி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து குதிரைப்பேரம் குறித்து விசாரணை நடத்திய  காவல்துறையினர்   சஞ்சங் ஜெய்ன் என்பவரை  கைது செய்தனர். அவர் நான்கு நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் எதிர்ப்பு எம்.எல்.ஏ. பன் வார்ல்லால் ஷர்மா பா.ஜ.க. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்குடன் ஆட்சியை கவிழ்ப்பது குறித்து பேசியதாக ஆடியோ டேப் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரஸ் தலைமை கொறடா காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் ஆட்சியை கவிழ்க்க சதி, ஆடியோ டேப் என இரண்டு வழக்குகளை காவல் துறையினர்  பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அசோக் சிங், பாரத் மலானி ஆகியோர் குற்றம்சாட்டப் பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் குரல் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வழக்குகளையும் விசாரிக்க

8 பேர் கொண்ட  குழுவை இராஜஸ்தான் அரசு அமைத் துள்ளது. இந்த குழு இரண்டு வழக்குகளையும் விசாரிக்க உள்ளது. குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையின் காவல்துறை கண்காணிப்பாளர்  விகாஸ் சர்மா தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

மராட்டியத்தில் கரோனா சிகிச்சைக்குப் பிளாஸ்மா கொடை ஊக்கப்படுத்த ரூ.2 ஆயிரம் அறிவிப்பு

மும்பை, ஜூலை 19, கரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் அந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக நேற்று முதல்அமைச்சர் உத்தவ் தாக்கரே மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணை யர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலிமூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- மராட்டியத்தில் கரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு மண்டலங்கள் உருவாக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனிமை முகாம்களில் போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்கிய திட்டம் செயல் படுத்தப்படுவதையும், மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

தற்போது மாநிலத்தில் 540 கரோனா நோயாளிகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர். கரோனாவை கண்டறிய மாநிலத்தில் ஆன்டிஜென் பரிசோதனைகளை அதிகரிக்க அரசு முடிவு செய்து உள்ளது.

மாநிலத்தில் மதம், சமூக மற்றும் அரசியல் கூட்டங் களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிளாஸ்மா சிகிச்சை அளிப்ப தற்கு, ரத்த பிளாஸ்மா கொடை செய்பவர்களுக்கு

ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதுபற்றி மக்களிடையே அதி காரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மத்திய மோட்டார் வாகன விதிகளில் மாற்றம்

புதுடில்லி, ஜூலை19, வாகன நம்பர் பிளேட்டில் தற்காலிக பதிவு எண்ணை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டி ஓட்டுவது இனி செல்லாது.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் விரிவான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  மத்திய மோட்டார் வாகன விதிகள் (சி.எம்.வி.ஆர்) கீழ் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வாகன விற்பனை யாளர்களிடம் இருக்கும் வாகனங்களில் தான் தற்காலிக நம்பர் பிளேட் பயன்படுத்தப்படும். மேலும் நம்பர் பிளேட்டில் ஆங்கில கேப்பிட்டல் எழுத்துக்கள் மற்றும் அரபி எழுத்துக்களை தவிர வேறு எந்த எழுத்துகளையும் எழுத கூடாது. இதுபோல் நம்பர் பிளேட்டில் வேறு எதுவும் எழுதப் பட்டிருக்க கூடாது. அதாவது பிராந்திய மொழி மற்றும் ஆங்கில சிறிய எழுத்துக்களை பயன்படுத்துவது குற்ற மாகும். ஏலம் மூலம் பெறப்பட்ட விஅய்பி பதிவு எண் களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்.