ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் பதவிக்கான விதிகள் : தமிழக அரசு வெளியீடு
July 29, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை,ஜூலை29, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக் குரைஞர்கள் பதவிக்கான 2020ஆம் ஆண்டின் விதிகளை தமிழக அரசு வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக் குரை ஞரை அங்கீகரிப்பதற்கு புதிதாக நிரந்தரக்குழு உருவாக்கப்பட்டுள் ளது. தலைமை நீதிபதி தலைமையிலான இந்தக் குழுவில், இரு மூத்த நீதிபதிகள், அரசு தலைமை வழக் குரைஞர், ஒரு மூத்த வழக்குரைஞர் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்த குழு ஏற்றுக்கொள்ளும் விண் ணப்பங்களை மட்டுமே அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் சமர்ப்பித்து, சம்பந்தபட்ட வழக் குரைஞரை மூத்த வழக்குரைஞராக தேர்வு செய்வது குறித்து முடி வெடுக்கப்படும். பழைய நடை முறையில் மூத்த வழக்குரைஞருக் கான விண்ணப்பங்கள் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் சமர்பிக்கப் பட்டு வந்தன.

வயது வரம்பு : மூத்த வழக் குரைஞராவதற்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே உள்ள விதிகளுடன் தற்போது புதிதாக குறைந்தபட்ச மாக 45 வயதை எட்டியிருக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய முறையில் வயது வரம்பின்றி இருந்தது.

அத்துடன் 15 வருட அனுபவம், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வரு மான வரி கணக்கு தாக்கல் செய் திருக்க வேண்டும். 5 ஆண்டுகளில் 15 தீர்ப்புகளில் அவரது பங்களிப்பு இருக்க வேண்டும். அவர்மீதான வழக்குகள் எதுவும் நிலுவையில் இருக்கக்கூடாது போன்றவை பழைய நடைமுறையில் ஏற்கெனவே உள்ளன.

மூத்த வழக்குரைஞருக்கான கட் டுப்பாடுகள்: வழக்காடிகளுக்காக நீதிமன்றத்தில் நேடியாக ஆஜராகி முறையீடு செய்யவோ அல்லது வழக்கை  ஒத்திவைக்க கோரிக் கையோ வைக்கக் கூடாது.

நீதிமன்றங்கள், தீர்ப் பாயம் என எதிலும் வழக்கினுடைய வழக் குரைஞர் இல்லாமல் நேரடியாக ஆஜராகக் கூடாது. வக்காலத்து தாக்கல் செய்திருக்கக் கூடாது. வழக் காடிகளுக்கு நேரடி சட்ட ஆலோ சனை வழங்கக் கூடாது.