ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இளைஞர்கள் மத்தியில் கரோனா பரவல் அதிகரிப்பு
August 20, 2020 • Viduthalai • உலகம்

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா, ஆக. 20- கரோனா அதிக அள வில் 20, 30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலம்பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதில் பெரும்பாலானோ ருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாததால், அவர்களால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித் துள்ளது.  இந்த மாதம் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களில் இளைஞர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் முதியோரும் அதிக பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோய் பரவல் மாற்றம் அடைந் துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறி யுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள சூழ லில், அதனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

 

ஆன்லைன் மூலம் கல்வி பெற

94 விழுக்காடு மாணவர்களிடம் இணைய வசதி இல்லை

ஆய்வுத்தகவல்

புதுடில்லி, ஆக 20- கரோனா பாதிப்பு காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியாக திறன்பேசி அல்லது இணைய வசதி பெற்றுள்ளனரா என்பது தொடர்பாக குழந்தைகள் உரிமை அமைப் பான ‘க்ரை’ கடந்த மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் 5,987 பேரிடம் ஆய்வு நடத்தியது.

அதில் 94 விழுக்காடு மாணவர்களிடம் இன்டர்நெட் இணைப்போ அல்லது திறன் பேசிகளோ இல்லை எனத் தெரிய வந்துள்ளது. 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர் களுக்கு இணைய இணைப்பு இருக்கிறதா என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கர்நாடகாவில் 1,445 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9 விழுக்காட்டினரிடமும், தமிழ கத்தில் 1,740 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 3 விழுக்காட்டினரிடமும் திறன்பேசிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 95 சதவீத பேரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த வருமானம் மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு திறன்பேசி என்பது ஒரு ஆடம்பர பொருளாகவே இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

கடவுள் சக்தி எங்கே?

மதுரையில் அம்மன் கோயிலில் பஞ்சலோகச் சிலைகள் திருட்டு

மதுரை, ஆக. 20- மதுரை திலகர்திடலில் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் பேச்சி யம்மன் கோயில் உள்ளது. கரோனா ஊரடங் கால் இக்கோயில் மூடப்பட்டு இருந்தது. ரூ.10 ஆயிரத்துக்குக் கீழ் வருமானமுள்ள கோயில்களை திறக்கலாம் என்ற அரசின் உத்த ரவால் இக்கோயிலை கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி திறந்து சுத்தம் செய்தனர். அப்போது கோயில் வளாகத்துக்குள் இருந்த மரப்பெட் டிக்குள் வைக்கப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட சிலைகள் உள்ளிட்ட பொருட்களை கோயில் நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

இதில் பஞ்சலோகம் பூசப்பட்ட குதிரை மேல் அய்யனார், யானை மேல் பொன்னர் சங்கர், விநாயகர் ஆகிய 3 சிலைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பேச்சிமுத்து என்பவர் திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேம ராக்களை காவல்துறையினர் ஆய்வுமேற் கொண்டதைத்தொடர்ந்து, கோயிலின் பின் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் வழியாக இரும்புக் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த ஒருவர் ஒருவர் மரப்பெட்டியில் இருந்து 3 சிலைகளையும் திருடி சாக்குப்பையில் வைத் துக் கொண்டு தப்பிச் செல்வது தெரியவந்தது. திருடுபோன பஞ்சலோகச் சிலைகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.