ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இல்லம், தெரு, ஊர்தோறும் தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்த நாள் விழா
September 6, 2020 • Viduthalai • கழகம்

திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

திருப்பத்தூர், செப். 6- திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 30.8.2020 ஞாயிறு காலை 11 மணிக்கு மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட இணைச் செய லாளர் அரங்க.இரவி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் தந்தை பெரியாரின் தொண்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொண்டு, உழைப்பு, தொடர்ந்து மக்களுக்கான போராட் டம் குறித்தும் விளக்கவுரையாற்றி னார். நமது தலைவர்களின் உழைப் பால் நாம் பல உரிமைகளையும் வாய்ப்பு களையும் பெற்றுள்ளோம். இவற்றை யெல்லாம் பொறுத்துக் கொள்ளவிய லாத பார்ப்பனர்கள் அய்யாவையும் ஆசிரியரையும் தரம் தாழ்ந்து விமர் சிக்கின்றனர். அதற்கு பதிலடி கொடுக் கும் வகையில் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக கொண் டாட வேண் டும் என கூறினார்.

மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல் வன், இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், மாணவர் கழக செயலா ளர் செல்லதுரை, மாநில மாணவரணி துணைச் செயலாளர் எ.சிற்றரசன், த.யாழ்திலீபன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றினார். மாநில அமைப்புச் செய லாளர் ஊமை.ஜெயராமன் தொடக் கவுரையாற்றினார்.

மகளிர் பாசறை மு.இந்திராகாந்தி, பழ.சுதா, பழ.மங்களாதேவி, மாவட்ட மகளிரணி தலைவர் ம. கவிதா, செய லாளர் இ.வெண்ணிலா, பொதுக்குழு உறுப்பினர் ம.ஜான்சி ராணி மற்றும் மாநில மகளிரணி பொருளாளர் எ. அகிலா ஆகியோர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எப்படியெல்லாம் சிறப்பாக கொண்டாடலாம் என்பது குறித்து உரையாற்றினர்.

சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர் இ. ஓவியா, மருத்துவக் கல்லூரி மாநில துணை அமைப்பாளர் சு.நாத்திகன் ஆகியோர் தங்களை பொறுப்பாளர் களாக நியமனம் செய்த தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மாணவர் கழக பொறுப்பாளர்கள் நிலவன், அகரன், பழ பூவிழி, பழ.கவி நிலா, மாவட்ட இளைஞரணி செய லாளர் தே.பழனிச்சாமி, பழ.அறிவு மதி, அன்புமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சி.தமிழ்ச்செல்வன், ஆசிரிய ரணி மாவட்ட தலைவர் இரா.பழனி, மாவட்ட துணைத் தலைவர் க.வெங் கடேசன், மாவட்ட செயலாளர் சே. ஜானகிராமன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர். எம் ஆர்ஆர்சி மாவட்ட தலைவர் இரா.பழனி, மாநில பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் உரையாற்றிய தைத் தொடர்ந்து மாவட்ட திராவி டர் கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

பெரியார் பிறந்த நாளின் சிறப்பாக:

- வீடுகளுக்கு வண்ண மின் விளக்கு அலங்காரம்.

- சிலைகளுக்கு வண்ண விளக்கு அலங்காரம் செய்து மாலை அணி வித்தல்

-தெருக்களில் கழகத்தவர் ஆதரவா ளர்களின் இல்லங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தந்தை பெரியார் படம் வைத்து மாலையிடல்.

- நலத்திட்ட உதவிகள் வழங்கல், மரக்கன்றுகள் நடல், கரும்பலகை புதுப்பித்தல்.

- இல்லங்கள் தோறும் கழக கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தந்தை பெரியாரின் பெருமையை ஊருக்கு பறைசாற்ற தீர்மானிக்கப்பட்டது.