ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இராம்விலாஸ் பஸ்வான் நலம்பெற கழகத் தலைவர் விழைவு!
October 4, 2020 • Viduthalai • கழகம்

லோக் தளம் (Lok Dal) கட்சியின் நிறுவனத் தலைவரும், மத்திய உணவுத் துறை அமைச்சருமான நண்பர் இராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது என்பதை அறிகிறோம் (4.10.2020).

அவர் விரைவில் முழு நலம் பெற்று இயல்பான தனது பணிகளுக்குத்  திரும்ப வேண்டுமென்ற ஒரு விழைவுச் செய்தியை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (4.10.2020) அனுப்பி யுள்ளார்.

அச்செய்தியின் விவரம் வருமாறு:

மாண்புமிகு இராம்விலாஸ் பஸ்வான்,

மத்திய உணவுத் துறை அமைச்சர்,

முகாம்: புதுடில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை

‘‘தங்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடை பெற்றது என்று அறிகிறோம். தாங்கள் விரைவில் முழுநலம் பெற்று, பொதுப் பணிக்குத் திரும்ப வேண்டுமென்ற விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.''

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

4.10.2020