ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இராமகோபாலனும் கீதையின் மறுபக்கமும்
October 10, 2020 • Viduthalai • மற்றவை

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் 1998 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆய்வு நூல்     கீதையின் மறுப்பக்கம். இந்த நூலை தடை செய்ய வேண்டும் என்றும்,  ஆசிரியர் வீரமணி அவர்களை கைது செய்ய வேண்டுமென்றும் அன்றைய முதல்வர் கலைஞரிடம் முறை யிட்டார் இராம கோபாலன்.  ஆனால்,  சில ஆண்டு களுக்குப்பின்  அவர் கையால்  இந்த புத்தகத்தை இராம கோபலன் பெற நேர்ந்தது.

2004 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், கீதை வழி நடப்போம் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். உலகப் பொதுமறை யான திருக்குறள் குறித்து எப்போதும்வாயே திறக்காத ஜெயலலிதா, பகவத் கீதையைப் பொதுமறை என்று குறிப் பிட்டுள்ளதாகக் கூறி  அதற்கு கண்டனம் தெரிவித் திருந்தார். இதையடுத்து கீதைக்கு எதிராக கலைஞர் பேசுவதாக பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அவரது கருத்துக்கு இந்து முன்னணியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபா லன் கூறுகையில், தொடர்ந்து இந்துக்களையும், அவர் களது நம்பிக்கையையும் கருணாநிதி விமர்சித்து வருகிறார். கருணாநிதிக்கு பகவத் கீதையின் அருமையை உணர்த்தும் வகையில், அவரை நேரில் சந்தித்து பகவத் கீதைபுத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்வேன் என்று கூறியிருந்தார். அதன்படி 08.09.2004 அன்று கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் வீட்டுக்கு ராம கோபாலன் வந்தார். அவரை கலைஞர் வீட்டிற்குள் அனுமதிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், கலைஞர்  வீட்டினரால் சிரித்தபடியே வரவேற்கப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார் ராம. கோபாலன். பின்னர் கலைஞரைச் சந்தித்த ராம. கோபாலன் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, பின்னர் அவ ரிடம்  பகவத்  கீதையை  வழங்கினார்.  அதை  சிரித்தபடியே பெற்றுக் கொண்டார் கலைஞர். பதிலுக்கு ராம கோபாலனுக்கு கீதையின் மறுபக்கம் என்ற தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கினார் கலைஞர். லேசாக அதிர்ச்சி காட்டிய ராம.கோபாலன் பின்னர், அந்தப் புத்தகத்தை மறுப்பேதுமின்றி வாங்கிக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து அனுப்பி வைத்தார் கலைஞர். இச் சந்திப்புக்குப் பின் வெளியே வந்த ராம.கோபாலன் நிருபர்களிடம் பேசுகையில், "கருணாநிதி இன்னும் மாறவில்லை. தொடர்ந்து இந்து விரோத மனப்பான்மையையே கொண்டுள்ளார். பகவத்கீதையைக் கொடுத்த எனக்குப் பரிசாக கீதையை பழித்து எழுதப்பட்ட புத்தகத்தைக் கொடுத்துள்ளார்" என்றார்.

 இந்து முன்னணி. ராம கோபாலன் சென்ற பின்னர் கலைஞர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் சந்திப்பு குறித்துக்கேட்டபோது, "பகவத் கீதையை நான் பழித்துப் பேசவில்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. வர்ணாஸ்ரம தர்மம், ஜாதிப் பிரிவினையைத் தூக்கிப் பிடிக்கும் அதன் கருத்துகள் திராவிடக்கொள்கைகளுக்கு மாறானவை. ஒரே குலத்தைச் சேர்ந்த தமிழ் மன்னர்களான நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளிக்கும் இடையே நடந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழ்ப் புலவர் கோவூர்க் கிழார். அதேசமயம், ஒரே குலத்தில் பிறந்த மன்னர்களுக்கிடையே போரைத் தூண்டியது கீதை. பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற யுத்த தர்மத் திற்கு மாறாக அனைத்து சூழ்ச்சிகளையும் செய்தார் கிருஷ்ணர். அதையே பின்பற்ற வேண்டிய முறை என்று சொன்னால் அதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்? அதற்காக கீதையைக் கொளுத்துங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. நமக்கு ஏற்காததது என்று நாம் கருதிவிட்டஒன்றை முதல்வர் ஜெயலலிதா படியுங்கள் என்று சொல்வதைத்தான் நான் மறுக்கிறேன். தர்மம் என்பது இல்லறத்தில் இருந்து ஆதரிக்கிறது. அடுத்து தான் துறவற தர்மம் வரும். பாண்டவர்கள் பக்கம்இல்லற தர்மம் இருந்தது உண்டா? அய்வருக்கும் தேவி என்பது தான் இல்லற தர்மமா? துரியோதனன் மனைவி பானுமதி ஒரே கணவனோடு குடும்பம் நடத்தினாள். அப்படியி ருக்க தர்மம் யார் பக்கம்? எனது கருத்துகள் இந்துக் களின் உணர்வுகளைப் புண்படுத்தாது. என்றார்.

- அரியலூரான்