ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இயற்கை வளத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்
August 9, 2020 • Viduthalai • இந்தியா

சென்னை, ஆக. 9- அண்மையில் மத்திய அரசு வெளியிட்டிருக் கும் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை குறித்த இந்திய ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற் சங்கத் தலைவர்களின் கூட் டமைப்பின் கருத்துகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச் சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் முன்னர் பதிவு செய்ய விரும்புகிறோம். விருப்பு வெறுப்பின்றி அடிப் படை உண்மைகளை ஆழ மாக ஆய்வு செய்து, பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்துகளை மத்திய அரசு பரிசீலனைக்கு உட்படுத்தும் என உளமார நம்புகிறோம்.

கரோனாவின் கொடிய தாக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் பெருந்துயரை யும், பேரிழப்பையும் எதிர் கொண்டு தம் உயிரைக் காக்கப் போராடி வரும் தருணத்தில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச் சூழல் ஆய்வறிக்கை நாட்டு வளர்ச்சியில் நாட்டம் கொண் டோரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஊர டங்கு காலத்தில் அர்த்தமுள்ள கலந்துரையாடல் சாத்தியமா?

கடந்த மார்ச் மாதம் முதல் இந்த ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு கட்டுப்பாடு கள் - தடைகள், பெரும் திர ளாகத் கூட தடை - வீட்டிலி ருந்தே வேலை, பொதுப் போக்குவரத்து முடக்கம், வாகனங்கள் பறிமுதல், வகை தொகையில்லா வழக்குகள் என நாட்டு மக்கள் நலிவுற் றிருக்கும் தருணத்தில் அச்சத் தைத் தவிர்க்கும் அர்த்த முள்ள கலந்துரையாடலுக் குச் சாத்திய மில்லை என் பதை அரசு உணர வேண்டும்.

கடந்த இருபதாண்டுக் காலமாக சுற்றுச்சூழல் அனு மதி யின்றி விசாகப்பட்டி னத்தில் செயல்பட்டு வந்த எல்.ஜி.பாலி மார்ஸ் ஆலை யில், மே மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்த விஷவாயுக் கசிவால் 12 தொழிலாளர்கள் உயிர்ப் பலியானதையும், 500 க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பல்வேறு மருத்துவமனைக ளில் உயிருக்குப் போராடி வருவதையும் செய்தி ஊடகங் கள் வெளிப்படுத்தியபோது நாடே பேரதிர்ச்சிக்கு உள் ளானது. அதைத் தொடர்ந்து அசாமின் 'டின்சுகியா' மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட் டுத் துறையில் அனுமதியின் றிச் செயல்பட்டு வந்த அரசு எண்ணெய்க் கிடங்கில்  மே மாதம் 27 ஆம் தேதி நிகழ்ந்த விஷவாயுக் கசிவைத் தொடர்ந்து பற்றியெரிந்த பெரு நெருப்பில் தீக்கிரை யாகி உயிர்நீத்த 5 தொழிலா ளர்கள், மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வரும் நூற்றுக்கணக்கான கிராம வாசிகள், தீக்கிரையான எண்ணற்ற வனவிலங்குகள், கருகிப்போய் நிற்கும் விலை யுர்ந்த மரங்கள் என அந்தப் பகுதியே மயான பூமியாகக் காட்சியளிக்கும் நிலை கண்டு நாடே கொந்தளிக் கிறது.

நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத் துக்கு உட்படுத்தி வாக்களிப் புக்குப் பின்னர் சட்டமாக நிறைவேற்ற வேண்டும். இத் தகைய சட்டப்பூர்வமான நடைமுறை  மட்டும்தான் மக் களாட்சி மாண்பை நிலை நிறுத்துவதாக அமையும்.

நாட்டு மக்களின் வாழ் வாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் இரு கண் களாகக் கருதிச் சரியான சட்ட வரைவை, சட்டத்தின் மாட்சியையும் மக்களாட்சி யின் மாண்பையும் ஒருசேர உறுதிப்படுத்தும் நல்ல முடிவை அரசு எடுக்க வேண் டுமென கேட்டுக் கொள்கி றோம் என  இந்திய ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற் சங்கத் தலைவர்களின் கூட்ட மைப்பு  தலைவர் எஸ்.பி. இராமன் தெரிவித்துள்ளார்.