ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்து முன்னணி இராமகோபாலன் மறைவு
October 1, 2020 • Viduthalai • மற்றவை

திராவிடர் கழகத் தலைவர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவனர் திரு.இராமகோபாலன் அவர்கள் (வயது 94) உடல்நலக் குறைவால் இன்று (30.9.2020) தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

கொள்கையில் நேர் எதிர் நிலையில் இருந்தாலும் மனிதநேய அடிப்படையில் சந்திக்கும் போதெல்லாம் அன்புடன் நலம் விசாரித்துக் கொள்ளும் பண்பு எங்கள் இருவரிடமும் உண்டு.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், அவரது அமைப்பினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

30.9.2020