ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியாவெங்கும் பெரியார் தேவை
August 8, 2020 • Viduthalai • மற்றவை

நெல்லையில் இரயில்வே துறையில் பணிபுரியும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். போதுமான அளவுக்குத் தமிழ் கற்று இருக்கிறார்கள்

இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டார். நான் ஒருசில தகவல்களைக் கூறினேன்.

முழுவதும் கேட்டு விட்டு, அவர் ஒரு முக்கியமான கருத்தைச் சொன்னார்.

"இந்தியா முழுவதும் அனைத்து சாதி மக்களும் அரசு வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள் என்றால், அந்த உரிமையை பெற்றுத் தந்து சட்டமாக்கியது டாக்டர் அம்பேத்கர் தான். அவரால் தான் இந்தியா மட்டும் அல்ல, தமிழகமும் பயன் அடைந்தது.

ஆனால், தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்கள், உங்களுக்குக் கிடைத்த கூடுதல் பொக்கிஷம்!

தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வகுத்துத் தந்த சட்டமும், உரிமையும் மக்களை முன்னேற வைத்தது என்றால், தந்தை பெரியார் அவர்களின் போராட்டம் இன்னும் கூடுதலாக மக்களை முன்னேற்றி இருக்கிறது

எங்கள் மாநிலத்தில் தலித் மக்கள் மட்டும் அல்ல, உயர்சாதி மக்களுக்கே இன்னும் கல்வி கிடைக்கவில்லை!

எங்கள் மாநிலத்தில் தலித் மக்கள் அரசியல் கட்சிகளில் பெரிய அளவு வளர முடியாது! கல்வி உரிமை இல்லாமல்  இன்றும் பல சாதி மக்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில், தலித் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சினிமாதுறை, அரசியல் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால், அதற்கு தந்தை பெரியார் அவர்கள் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

எங்களுக்கு அம்பேத்கர் என்ற ஒரு தலைவரால், இரண்டு மடங்கு முன்னேற்றம் வந்தது என்றால்,உங்களுக்கு அம்பேத்கர், பெரியார் என்று இரண்டு தலைவர்களால், நான்கு மடங்கு முன்னேற்றம் வந்துள்ளது" என்று தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பிரமிப்பாக பேசினார்.

இன்னொன்றையும்  அவர் சொன்னார், "காங்கிரஸ் பெயரைச் சொன்னால் பா.ஜ.க. பதறாது! ஆனால், பெரியார் என்று சொன்னால் பதறுகிறார்கள்" 

அவர் பேசிய கருத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்!

- கலை கண்ணன் (பேஸ்புக்-கில்)