ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்குத் தொற்று
September 4, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி,செப்.4 பன்னாட்டளவில் கோடிக் கணக்கான மக்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவும் கோவிட்19 வைரஸ் தொற்று பரவலால் திணறி வருகிறது. இங்கும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கிலான வர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று (செப்.3) காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 83 ஆயிரத்து 883 பேர் கரோனாவிடம் சிக்கி உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். நாள்தோறும் பாதிப்பில் இப்படி உச் சத்தை எட்டியுள்ள கரோனாவின் வெறி யாட்டம் மத்திய--மாநில அரசுகளைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக் கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் 38 லட்சத்து 53 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது.

இதைப்போல நாடு முழுவதும் 1,043 பேர் ஒரே நாளில் கரோனாவால் பலியா கியுள்ளனர். இதனால் நாட்டில் கரோ னாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 67 ஆயிரத்து 376 ஆக அதிகரித்து உள்ளது. அதேநேரம் நாட்டின் இறப்பு விகிதம் 1.75 சதவீதமாக குறைந்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 24 மணி நேரத்தில் 68 ஆயிரத்து 584 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இது குணமடைந்தோரின் மொத்த எண் ணிக்கையை 29 லட்சத்து 70 ஆயிரத்து 492 ஆக உயர்த்தி இருக்கிறது.

குறிப்பாக நாட்டின் குணமடைந்தோர் விகிதம் 77.09 ஆக அதிகரித்துள்ளது. தற் போதைய நிலையில் 8 லட்சத்து 15 ஆயி ரத்து 538 பேர் பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே நாட்டில் நாள்தோறும் பரிசோதனை எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்து உள்ளது. நேற்று காலை வரையி லான 24 மணி நேரத்தில் மட்டும் 11 லட் சத்து 70 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக் கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியே 55 லட்சத்து 9 ஆயிரத்து 380 ஆக அதி கரித்து இருக்கிறது.

இவ்வாறு அதிகரித்து வரும் பரிசோத னைகள் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களை விரைவாகக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கு வழி ஏற்படுவதாகவும், இதனால் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

நாட்டின் கரோனா இறப்பு எண்ணிக் கையை பொறுத்தவரை மராட்டியம், ஆந்திரா, கருநாடகா, டில்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள்தான் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதத்தை பெற்றிருக்கின்றன. அதிலும் கடந்த வாரங் களின் நிலவரங்களை ஒப்பிடுகையில் டில்லி மற்றும் கருநாடகா மாநிலங்களில் இறப்பு விகிதம் நாள்தோறும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறைச் செய லாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வாராந்திர இறப்பு விகிதத் தைக் கணக்கிட்டால் டில்லியில் நாள் தோறும் 50 சதவீதமும், கருநாடகாவில் 9.6 சதவீதமும் சராசரியாக அதிகரித்துள்ளது. அதேநேரம் ஆந்திரா (4.5 சதவீதம்), மராட்டியம் (11.5 சதவீதம்), தமிழகம் (18.2 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ராஜேஷ் பூஷண் கூறினார்.

இதைப்போல தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் மராட்டியம், ஆந்திரா, கருநாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள் 62 சதவீத எண்ணிக்கையை கொண்டிருக்கின்றன.