ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியாவில் கரோனா பரவலை கையாண்ட மோடியின் உத்தி மிகவும் மோசமானது
October 8, 2020 • Viduthalai • உலகம்

அமெரிக்க பொருளாதார அறிஞர் குற்றச்சாட்டு

நியூயார்க், அக்.8 கரோனா பரவலை  இந்தியா கட்டுப் படுத்திய மோடியின் யோசனைகள் மிகவும் மோசமானது என்று விமர்சித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்.

அவர் கூறியுள்ளதாவது, “என்ன செய்யக்கூடாது என்பது இந்தியா ஒரு உதாரணக் குழந்தை. இந்திய அரசு அறிவித்த உரடங்கு என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நோய் பரவவே செய்தது.

ஊரடங்கு என்ற ஒரு விஷயத்தை இந்தியா கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. ஆனால், ஒரு ஏழை நாட்டில், ஊரடங்கு என்பது என்ன விளைவு ஏற்படுத்தும் என்பது பற்றி அரசு கவலைப்படவில்லை.

மக்கள் எப்படி வாழ்வார்கள்? தங்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? என்பது குறித்து யோசிக்கப்படவில்லை. வைரஸைப் பரப்புவதைவிட மோசமானது எதுவுமில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க முடியாது.

நான் ஒரு உள்ளடங்கிய(அனைவரும் இணைந்த) சமூகத்தை உருவாக்கத் தொடங்குவேன். எது செய்யப்பட வேண்டுமோ, அதற்கு எதிர்மாறானதுதான் பிரிவினை அரசியல். மோடி, உங்களின் நாட்டை பிளவுபடுத்த முயல் கிறார். அவரின் இந்தச் செயல், நாட்டின் அடித்தளத்தையே பலவீனமாக்கிவிடும்” என்று பேசினார்” ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்.

 

மருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு மறுப்பு

மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சம்மன்

புதுடில்லி,அக்.8, மருத்துவப் படிப்பில் மாநிலங்களில் இருந்து பெறப்படும் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு “ஜீரோ”- முற்றிலுமாக மறுக்கப்படுவது குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்திட்ட புகார் மனுவின் அடிப்படையில், ஆணையத்தின் தலைவர் டாக்டர் பக்வான் லால் சகானி, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநரக அதிகாரி ஆகியோரை 8.10.2020 மதியம் 3 மணிக்கு ஆணையத்தின் தலைமை அலுலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திட உத்தரவிட்டுள்ளார்.

முன்னர், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று அளித்திட்ட உத்தரவில், மூன்று மாதங் களுக்குள் மத்திய அரசு, தமிழ்நாடு சுகாதாரத்துறை செய லாளர் உள்ளிட்டோர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீட்டை முடிவு செய்திட உத்தர விட்டிருந்தது. இதன்படி, மத்திய அரசு 7.9.2020 அன்று குழு நியமித்து அதன் முதல் கூட்டம் 22.9.2020 அன்று டில்லியில் நடைபெற்றுள்ளது.