ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியாவில் கடந்த 9 வாரங்களில் புதிய உச்சமாக 9.1 சதவிகிதமாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
August 20, 2020 • Viduthalai • இந்தியா

டில்லி, ஆக. 20- இந்தியாவில் கடந்த 9 வாரங்களில் புதிய உச்சமாக 9.1% வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள் ளது. இந்திய பொருளாதா ரத்தை கண்காணிக்கும் இந்த குழுவின் தரவின் படி 37.9 சத வீதத்தில் இருந்து 38.4 சதவீத மாக வேலையின்மை உயர்ந்து உள்ளது. கிராமப் புறங்களில் கடந்த ஒரு வாரத்தில் 8.86% வேலையின்மை அதிகரித்துள் ளதாக கூறப்படுகிறது.

கரோனா பரவலைக் கட் டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டதால் தொழில் நடவடிக் கைகள் முடங்கின. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற் றுமதி - இறக்குமதி வர்த்தகமும் பின்னடைவைச் சந்தித்தது. இந்தியாவுக்கு வரும் முதலீ டுகளும் குறைந்தன. இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியானது.

தொழில் நிறுவனங்களின் வருவாய் குறைந்து, வேலை வாய்ப்புகளிலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தியாவில் கடந்த 9 வாரங்களில் புதிய உச்சமாக 9.1% வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள் ளது என சிஎம்அய்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய பொரு ளாதார கண்காணிக்கும் மய்யம் (சிஎம்அய்இ) வெளியிட்டுள்ள தகவல்களின்படி; கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூலை 12-ஆம் தேதியுடன் முடி வடைந்த வாரத்தில் 6.34 சதவீதமாக சரிந்தது, ஆனால் அது மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 17.92 சதவீதமாக இருந்தது, மேலும் ஜூலை 19ஆ-ம் தேதியு டன் முடிவடைந்த வாரத்தில் 7.10% ஆகவும், அடுத்த வாரத் தில் 7.66% ஆகவும் மாறியது.

ஆனால் ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.47% ஆக குறைந் தது. தற்போது கிராமப்புற வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.86% ஆக மீண்டும் அதிக ரித்து வருகிறது. நகர்ப்புற இந்தியாவில், வேலையின்மை விகிதம் மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 25.14 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.73 சதவீதமாகக் குறைந்து வரு கிறது. ஆனால் அதன் பின் னர் ஆகஸ்ட் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.31% ஆகவும், ஆகஸ்ட் 16-ஆம்  தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.61% ஆகவும் அதி கரித்து வருகிறது. ஏப்ரல் மற் றும் மே மாதங்களில் 23.5% ஆக இருந்த இந்தியா வேலையின்மை விகிதம் முதலில் ஜூன் முதல் வாரத்தில் 17.51% ஆகக் குறைந்தது, பின்னர் அது இரண்டாவது வாரத் தில் 11.6% ஆக சரிந்தது.

இது ஜூலை மாதத்தில் 7.4% ஆக குறைந்தது, இது 2019-20 முழுவதும் சராசரி வேலையின்மை விகிதமான 7.6%அய் விடக் குறைவாகும். ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது 7.19% ஆக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது மீண்டும் 8.67 சதவீதமாகவும், ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.1 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என சிஎம் அய்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது