ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியர்களில் அடையாளம் காணப்பட்டுள்ள வகை 2 நீரிழிவின் புதிய மருத்துவ தகவல்
August 25, 2020 • Viduthalai

சென்னை, ஆக. 25 வகை 2 நீரிழிவின் புதிய துணைப் பிரிவுகள் மற்றும் ஆசிய இந்திய மக்கள்தொகையில் நுண்இரத் தக்குழாய் விளைவுகளோடு அவைகளின் தொடர்பு,  தர வின் அடிப்படையில் முன் னெடுக்கப்பட்ட கிளஸ்டர் பகுப்பாய்வு  தி இன்ஸ்பயர்டு ஸ்டடி என்ற தலைப்பில் சமீ பத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது, 2020 ஆகஸ்ட் 18 அன்று  ஓபன் டயாபெட் டிஸ் ரிசர்ச் அன்டு கேர் தளத் தில், இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. 

இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்களின் கருத்துகள்:

டாக்டர் மோகன்ஸ் நீரி ழிவு சிறப்பு மையத்தின் நிர் வாக இயக்குனரும், மெட் ராஸ் டயாபெட்டிஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் துணைத் தலைவரும், இந்த ஆய்வின் முதல் ஆய்வாளருமான டாக் டர் அஞ்சனா, இதுநாள் வரை அனைத்து வகை 2 நீரிழிவு நிலைகளுக்கும் ஒரே மாதிரி யாகத்தான் நாம் சிகிச்சைய ளித்து வந்திருக்கிறோம்.  வகை 2 நீரிழிவின் மாறுபட்ட கிளஸ் டர்கள், இந்தியர்களிடம் கண்டறியப்பட்டு, விவரணை செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.  ஆகவே, இந்த ஆய்வுக் கட் டுரை, அதிக ஆர்வமூட்டுவ தாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது, என்று கூறி னார்.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மய்யத்தின் தலைவரும் மெட்ராஸ் டயா பெட்டிஸ் ரிசர்ச் ஃபவுண்டே ஷனின் தலைவரும், இந்த ஆய்வின் முதுநிலை ஆய்வா ளருமான டாக்டர் மோகன்  பேசுகையில், வகை 2 நீரிழி வின் இந்த துணைப்பிரிவுகள், சிகிச்சை மற்றும் நீரிழிவிற்கு எதிரான மருந்துகளை தேர்வு செய்வது என்பவற்றைப் பொறுத்தவரை முக்கியமான உட்குறிப்புகளை கொண்டி ருக்கின்றன.  எடுத்துக்காட் டாக, கடுமையாக சார்ந்திருக் கும் நீரிழிவு பிரிவினர், சல் போனில் யூரியா ஏஜென்ட்கள் அல்லது சுரப்பை ஊக்கு விக்கும் பொருள் ஆகியவற் றிற்கு அநேகமாக சிறப்பாக பதில் வினையாற்றக் கூடும் அல்லது இன்சுலின் அவர்க ளுக்குத் தேவைப்படலாம்; ஆனால், இன்சுலின் எதிர்ப் புத்திறன் கொண்ட நபர்கள், மெட்ஃபார்மிங் போன்ற இன்சுலின் சென்சிடைசருக்கு சிறப்பாக பதில்வினையாற்று வார்கள், என்று கூறினார்.

டன்டி பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த மருத்துவப் பள்ளியில்  மரபணுத் தொகுதி கல்வி துறையின் தலைவரான டாக்டர்.காலின் பால்மர் பேசு கையில், இந்த ஆய்வு முடிவுகள், இந்தியர்களுக்கு மட்டும் தனித்துவமாக இருப்பதாக தோன்றுகிறது.  ஸ்கான்டினேவிய மக்களிடம் முன்பு நடத்தப்பட்ட ஆய்வுக ளிலிருந்து பிரசுரிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு இவை கள் மாறுபடுகின்றன, என்று கூறினார்.

டன்டி பல்கலைக்கழகத் தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த மூலக்கூறு மற்றும் மருத்துவப் பிரிவின் நீரிழிவு மருத்துவத் துறையின் பேராசி ரியரும் மற்றும் இந்த ஆய்வின் முதுநிலை ஆய்வாளருமான டாக்டர். ஈவான் பியர்சன் பேசுகையில், “DPP4 மட்டுப் படுத்திகள் மற்றும்  SGLT2  மட்டுப்படுத்திகளுக்கு ஆசி யர்கள் சிறப்பாக பதில்வினை யாற்றுகின்றனர் என்று சமீ பத்தில் நாங்கள் கண்டறிதல் முடிவுகளை தெரிவித் திருந் தோம்.  தெற்காசிய மக்களிடம் இளவயதிலேயே நீரிழிவு நிலை தோன்றுவதையும் மற் றும் அதிக அளவில் இன்சு லின் சுரப்பு குறைபாடு இருப் பதையும் இந்த ஆய்வின் முடி வுகள் உறுதி செய்கின்றன, என்று கூறினார்.