ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியப் பொருளாதாரம் தொடர் சரிவில்...
August 6, 2020 • Viduthalai • இந்தியா

 வளர்ச்சிக் குறியீடான பிஎம்அய் 50க்கும் கீழே போனது

புதுடில்லி, ஆக.6 மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே, இந்தியப் பொருளா தாரம் சரிவில் போய்க் கொண்டிருக்கிறது. 2016 -இல் பிரதமர் மோடி திடீரென அறிவித்த பணமதிப்பு நீக்கம், 2017- இல் அவசர கதியில் அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகி யவை இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழிற் துறைகளை மட்டுமன்றி, கனரகத் தொழில் களையும் மிகமோசமாக பாதித்தது. வேலை யின்மை முன்னெப்போதும் இல்லாத வகை யில், சுமார் 8 சதவிகிதத்தை எட்டியது. நாட் டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 4.5 சதவிகிதமாக குறைந்தது.

இந்நிலையில், கரோனா தொற்று மற்றும் அதனையொட்டி மார்ச் மாதம் அமலுக்கு வந்த பொதுமுடக்கம், இந்தியப் பொருளா தாரத்தை மேலும் மோசமாக்கி அதல பாதா ளத்திற்குத் தள்ளியது. மொத்த உள்நாட்டு மதிப்பானது, வளர்ச்சிக்குறைவு என்பதிலி ருந்து மைனஸூக்குப் போனது. ஆனால், பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பின்னரும், பொருளாதாரம் பெரிய அளவிற்கு மீட்சி பெறவில்லை; சரிவிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை, பிஎம்அய் எனப்படும் இந்தியாவின் உற்பத்திக்கான (Purchasing Managers Index - PMI) குறியீடு உறுதிப்படுத்தி இருக்கிறது. பிஎம்அய் குறி யீட்டுப் புள்ளிகள் 50- க்கு மேல் இருந்தால், ஒருநாடு வளர்ச்சியில் இருப்பதாகக் கணக் கிடப்படும். அந்த வகையில், பிஎம்அய் புள்ளி கள், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 2020-இல், வரலாறு காணாத அளவில், 27.4 புள்ளி களுக்கு இறங்கியது. அதன்பின்னர் கடந்த ஜூன் 2020 மாதத்தில் 47.2 புள்ளிகளுக்கு வந்தது. ஆனால், தற்போது 2020 ஜூலையில் 46 புள்ளிகளாக மீண்டும் சரிவைச் சந்தித் துள்ளது என்று தரமதிப்பீட்டு நிறுவனமான ‘அய்எச்எஸ் மார்க்கிட்’ (IHS Markit) தெரிவித் துள்ளது. வரும் மாதங்களிலும், பிஎம்அய் தொடர்ந்து கீழ் நோக்கிப் போவதற்கான சாத்தியங்களே உள்ளதாகவும், இது அவுட் புட் & புதிய ஆர்டர்களில் தெரிவதாகவும் கூறியுள்ள அய்எச்எஸ் மார்க்கிட், “இந்திய உற்பத்தித் துறையில் புதிய ஆர்டர்கள் தொடர்ந்து 4- ஆவது மாதமாக சரிந்து இருக்கிறது. தொழிலாளர்கள் கிடைக்காமை, மூலப் பொருட்கள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவை இந்திய உற்பத்தித் துறைக்கு புதிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது'' என்றும் குறிப்பிட் டுள்ளது.

கரோனா பொதுமுடக்கப் பிரச்சினையால், இன்னும் பல கம்பெனிகள் & நிறுவனங்கள் ஆர்டர் கிடைக்காமல் போராடிக் கொண்டு இருக்கின்றன; கரோனா தொற்றுப் பரவல் முடிவுக்கு வந்து, கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் அதுவரை உற்பத்தியில் ஒரு முன்னேற்றத்தைப் பார்க்க முடியாது என்று ‘அய்எச்எஸ் மார்கிட்’ நிறுவனத்தின் பொரு ளாதார வல்லுநர் எலியட் கெர் தெரிவித் துள்ளார். ஒருவேளை கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதி கரித்தால், அதுமேற்கொண்டு புதிய பொது முடக்கங்களைக் கொண்டு வரும். அது இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை யாக இருக்கும் உற்பத்தித் துறை மீட்சிக்குப் பெரிய தடையாக இருக்கும் என்றும் எலியட் கெர் எச்சரித்துள்ளார்.