ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்  கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு
July 22, 2020 • Viduthalai • கழகம்

சென்னை, ஜூலை 22 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகமான பாலன் இல்ல த்தையும், மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு போன் றோரையும், பிற தலைவர்களையும்,  செயல்பாட்டாளர் களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இழிவாகவும், ஆபாசமாகவும் சித்திரித்து வரும் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கூட்டத்தையும், அவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் தமிழக அரசையும், காவல்துறையையும்  கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளும் பங்கேற்றனர்.

சென்னையில் துணைத் தலைவர் பங்கேற்பு

சென்னையில் பாலன் இல்லத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் இன்று (22.7.2020) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) தேசியக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாலர் வன்னி அரசு, மனிதநேய மக்கள் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட பல்வேறு இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தோழர் இரா.முத்தரசன், கடந்த 14-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட அவதூறு குறித்து 17-ஆம் தேதியும், 20-ஆம் தேதியும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தும், இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என்றும், நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரிகள் தான் முடிவு செய்கிறார்கள் என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பாலன் இல்லத்தை அவதூறாகவும், மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் இரா.நல்லக்கண்ணு அவர்களை தரக்குறைவாகவும் எழுதியுள்ளவர்களை தண்டித்தும் உரையாற்றினார்

திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், இளைஞரணி தலைவர் மணிதுரை, துணைச் செயலாளர் பிரபாகரன், சண்முகப் பிரியன், சேதுராமன், ஆனந்த் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.  பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர் முனைவர் சுந்தரவள்ளி,  சி.பி.அய். லெனின், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்களும் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.

சி.பி.எம். தேசியக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.