ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமிப்பதா
October 29, 2020 • Viduthalai • தமிழகம்

ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமிப்பதா?

இதுதான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ!  | தி.மு.க., காங்., ம.தி.மு.க., வி.சி.க. கண்டனம்

சென்னை, அக்.29  சென்னையில் மூதாட்டி வீட்டு முன்பாக வேண்டும் என்றே சிறுநீர் கழித்து அராஜகத்தில் ஈடுபட்ட மருத்துவர் சுப்பையா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக் கப்பட்டுள்ளார். இதற்கு திமுக, காங் கிரஸ் மதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை யின் தலைவராக வி.எம். கடோச்சை மத்திய அரசு நியமித்திருக் கிறது. இவர் தற்போது புதுவை ஜிப்மர் மருத்துவ மனையின் தலைவராக உள்ளார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட உறுப்பினர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மருத்துவர் சண்முகம் சுப்பையாவும் ஒருவர். இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவராக உள்ளார்.

மேலும், கார் நிறுத்துவது தொடர்பாக, தனது வீட்டின் அருகில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரது வீட்டு முன்பாக வேண்டும் என்றே அநாகரிகமாக சிறுநீர் கழித்த சர்ச் சையில் சிக்கியதோடு, பயன்படுத்திய முகக் கவசங்களை அவர் வீட்டின் முன்பு எறிந்தவர் மருத்துவர் சண் முகம் சுப்பையா. இதனால் சென்னை காவல்துறையினர் இவர் மீது வழக்கும் பதிவு செய்திருக்கின்றனர்.தற்போது அந்த சண்முகம் சுப் பையாவை எய்ம்ஸ் மருத்துவமனை யின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச் சையாகி இருக்கிறது. சமூக வலை தளங்களில் சண்முகம் சுப்பையாவுக்கு எதிரான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தி.மு.க.

இந்நிலையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில், “எய்ம்ஸ் மருத் துவமனைக்கான 3 எம்.பிக்கள் குழுவை அறிவிக்கவில்லை; ஆனால் சிறுநீர் சர்ச்சையில் சிக்கிய சண்முகம் சுப்பையாவை நியமித்திருக்கிறார்கள். இது பாஜகவின் ஜனநாயக விரோத செயல் என கூறியுள்ளார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப் பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத் துவமனையின் உறுப்பினராக சுப் பையா சண்முகத்தை நியமித் திருப்பது அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்ப தற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ம.தி.மு.க.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை இயக்குநர் குழுவில், சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக, நடுவண் அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

இவர், கார் நிறுத்த இடப் பிரச்சினைக்காக, அண்டை வீட்டுச் சுவரில் மூத்திரம் பெய்து அடாவடி செய்ததாக, சமூக வலைதளங்களில் காணொலிகள் வெளி யாகின; 62 வயதுப் பெண் ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக, இவர் மீது, காவல்துறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.

இவ்வாறு பண்பாடு அற்ற முறையில் நடந்து கொண்ட இவரை, இயக்குநர் குழுவில் இடம் பெறச் செய்து இருப்பது, எய்ம்ஸ் என்ற உயர்ந்த மருத்துவ நிறுவ னத்தின் மதிப்பைக் குறைக் கின்ற செயல் ஆகும்.

இவர், ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்; பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப் பில் பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சி ஆட் சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், நடுநிலையாக இயங்க வேண்டிய அனைத்து நிறுவ னங்களிலும், சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்த வர்களைக் கொண்டு வந்து திணித்து வருகின்றது. அவர் களும், முடிந்த அளவுக்கு அந்த அமைப்புகளைச் சீர் குலைத்து வருகின்றார்கள்.

மதுரை எய்ம்ஸ் இயக்கு நர்கள் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என நடுவண் அரசை வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக் குமாரும் இது தொடர் பாக எதிர்ப்பை பதிவு செய் துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை  யின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவ மதிப் பதில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கணித்த பா.ஜ.க.

இந்த எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் குழுவில் தமிழக எம்.பி.க் கள் யாருமே நியமிக்கப் படாமல் காலி இடம் என அறிவிக்கப்பட் டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் மதுரை மற்றும் அதனை சுற்றிய திண்டுக்கல், விருது நகர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் எம்.பிக்கள் இருக்கின்றனர். இப்படி தமிழக எம்.பி.க்கள் இருந்தும் கூட மத்திய அரசு ஏன் காலி இடமாக அறிவித்தது என்பது தான் கேள்வி. காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். சிறுநீர் சுப்பையா விவ காரத்துடன் தமிழக எம்.பி.க்கள் புறக்கணிப்பும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.