ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆர்.எஸ்.எஸின் பாசிசம்!
September 8, 2020 • Viduthalai • மற்றவை

பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தை முஸ்லிம்களும் கிறிஸ் தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் வலியுறுத்தினார்.

ஆக்ராவில் (அக்.15 - 2000) ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய் திருந்த மூன்றுநாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, உ.பி. முதல்வர் ராம் பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிறைவு நிகழ்ச்சியில் சுதர்சன் ஆற்றிய உரை விவரம்:

பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும் பிற மதங்களின் கருத்தையும் பிற மதங்களின் கருத்துக் களுக்கு மதிப்பளிக்கும் தன்மை யையும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர் களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.

சிறீராமபிரான், சிறீகிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ் லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அன்னிய நாட்டிலிருந்து நமது நாட்டின்மீது படையெடுத்த பாபரை எதற்காக முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாட வேண்டும்? பாபருடைய கல்லறைக் கருத்துக்களை முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானமே புறக்கணித்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். :

முஸ்லிம்களின் முன்னோர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல. எனவே முஸ்லிம்களின் முன் னோர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான்.

ஈரானிலுள்ள முஸ்லிம்கள் தங்க ளுக்கென சுபியிசத்தை வகுத்துக் கொண்டனர். எனவே இஸ்லாமிய புதிய அமைப்பை ஏற்படுத்துவது பற்றி இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவைத் துண்டாடியது மனித வரலாற்றின் மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முத்தா ஹிதா குவாமி இயக்கத்தின் தலைவர் அல்தாப் ஹுசைன் தெரிவித்துள்ள கருத்தை முஸ்லிம்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

அனைத்து மதங்களும் சமமான தல்ல என்று வாடிகனிலுள்ள கத்தோ லிக்க கிறிஸ்தவ தலைமையிடம் வெளியிட்டுள்ள அறிக்கை கண்டனத் துக்குரியது. இதுபோன்ற கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள (கத்தோலிக்க மிஷினரிகளை) கிறிஸ்தவ அமைப் புகளை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத மாற்றம் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்து.

வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடத்தின் கருத் துக்கு பெரும்பாலான இந்திய கிறிஸ் தவர்கள் கட்டுப்பட்டுள்ளனர். இங்கி லாந்து. ஸ்காட்லாந்து அயர்லாந்து ஆகியவை தங்களுக்கென சுதேசி சர்ச் கருத்துக்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

எனவே இந்தியக் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்க தலைமையிடத்தின் ஏற்க முடியாத கருத்தை உதறித் தள்ளிவிட்டு அதனுடன் உள்ள உறவைத் துண்டித் துக் கொள்ள வேண்டும். ரட்சிப்புக்கு இதர பல வழிகள் உள்ளன.

'தினமணி' 16.10.2000