ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கரோனா ஊரடங்கு
August 5, 2020 • Viduthalai • இந்தியா

டில்லி, ஆக. 5- கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக முறை யான திட்டமிடல் இன்றி அறிவிக் கப்பட்ட திடீர் ஊரடங்கு காரண மாக சாமானியர்கள் சொல்லொண்ணா துயரடைந்து வருகிறார்கள். இதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த ஊடகமும் பேசவில்லை.

நாடெங்கும் கோவிட்-19 ஊர டங்கு சூழல், குழந்தை உரிமை தொடர்பான பல முக்கிய சிக்கல் களை, நாடு முழுவதும்  உருவாக்கி யுள்ளது.

குழந்தைத் தொழிலாளர், வீடின்மை, குழந்தைகள் ஆரோக் கியம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பின்னடைவு, பள்ளிகளிலிருந்து நிற்றல் போன்ற பெரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் திரண்டு பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாகக் கூறு கிறார் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான டில்லி கமிஷன் சேர்மன் அனுராக் குந்து.

அவர் கூறியுள்ளதாவது, “இது எனது கருத்து மட்டுமல்ல; பன் னாட்டுத் தொழிலாளர் அமைப்பும் இதுகுறித்த தனது கவலையை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டதன் கார ணமாக, பல குழந்தைகள், பள்ளிக ளிலிருந்து இடைநின்று குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டில்லி உட்பட  நாட்டின் அனைத்து பெருநகரங்களி லும் இதே நிலைதான் தொடர்கிறது..

ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு  நிறுவனங்களில் போதுமான பணியாளர்கள் இல் லாததால் குழந்தைகளைக் கவனிப் பார் யாருமின்றி அல்லல் படுகின் றனர், பல குழந்தைகள் சாலையில் வந்து பிச்சை எடுக்கும் நிலை தொடர்கிறது, அதே நேரத்தில் தனியார் அமைப்புகளில் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது, பெரும்பாலான தனியார் அமைப்பு கள் நன்கொடைகளை மட்டுமே நம்பி ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் கரோனா தொற்று கார ணமாக பொருளாதாரத்தில் ஏற் பட்ட தாக்கத்தின் காரணமாக இந்த அமைப்புகளுக்கு நன்கொடை கள் கிடைப்பது முற்றிலும் நின்று விட்டது. இதனால் வீடுகளுக்குச் சென்று உணவுப்பொருட்களை கேட்டு வாங்கி வரும் அவலம் ஏற் பட்டுள்ளது,

சில குழந்தைகள் வெளி யேறிச்சென்று விட்டனர். இவர்கள் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கி சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஆதரவற்ற குழந்தைகள் குறித்து எந்த சிந்தனையுமே இல்லாமல் இருப்பது அரசின் தொடர் நட வடிக்கைகள் மூலம் தெரிகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக டில் லியில் வசித்துவரும் நான், ஆதரவற்ற பல குழந்தைகள் சாலையில் திரி வதை அதிகம் காண்கிறேன். இவர் கள் எல்லாம் முன்பு ஆதரவற்ற இல்லங்களில் வாழ்ந்தவர்கள்.  மேலும், சுகாதாரத் துறையின் கவனம் முழுவதையும் கரோனாவை நோக்கித் திருப்பி விட்டுள்ளதால், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவனிப்பு பின்தள்ளப்படுகிறது” என்று கவலை தெரிவித்துள்ளார் அவர்.